மலைக்க வைத்தீர்கள்

மலைக்க வைத்தீர்கள்
Published on

உங்களுக்கு பி.பி சுகர் இருக்கா! என்று கேட்டு ‘இருக்கு' என்றால் ‘ எனக்கும் இருக்கு' என்று சந்தோஷப்படும் மக்கள் மிகுந்த சமூகத்தில் இலவச ஆலோசனைகளும், மருத்துவ குறிப்புகளும் தாராளமாக கிடைத்து குழப்புகின்றன. திடீர் மாரடைப்பு மரணங்கள் பயமுறுத்துகின்றன. நல்லவேளை, நீரிழிவு வியாதி அல்ல. உடலில் ஏற்படும் சிறுகுறையே. கட்டுப்பாட்டில் வைத்தால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம் என்று டாக்டர் வி. மோகன் மூலம் தெளிவுவந்தது. இனிப்பான ஆபத்தை சிறு விபத்தாக கருதி கடக்க 23 பக்கங்களை ஒதுக்கி, எங்கள் உடல் நலனில் உங்களுகுத்தான் எவ்வளவு அக்கறை! என்று மலைக்க வைத்துவிட்டீர்கள். மகிழ்ச்சி!

மல்லிகா அன்பழகன், சென்னை

ஆங்கில அணை

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கைத்தட்டலுக்காக மேடையில் பேசினால் போதுமா? எங்கும் தமிழ் இருக்க வேண்டுமென்றால் தமிழை அதற்கு தகுதியுடையதாக்க வேண்டுமென்று சொன்னதோடு செய்தும் காட்டிய மணவை முஸ்தபாவை எத்தனை தமிழனுக்கு தெரியும்! ஆங்கில வழிக் கல்வியைத்தான் அந்தஸ்தாக பாவிக்கிறோம். ஆட்சி மொழியாக ஆங்கிலத்தையே அங்கீகரிக்கிறோம். எத்தனை பேருக்கு ழ, ல, ள சரியா உச்சரிக்க வரும்? எத்தனை பேர் தமிழில் கையொப்ப மிடுகிறோம்! மொழியே இனத்தை காக்கும். ஆனால் இந்தியை தடுக்க ஆங்கில அணையைக் கட்டி, தமிங்கிலீஷையே வளர்த்தோம் என்ற மணவை முஸ்தபாவின் வருத்தம் போக்க, எங்கும், எதிலும் தாய்மொழியை கடைபிடிப்போம்.

யாழினி பர்வதம், சென்னை

பெட்டகம்

அந்திமழை தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். அரசியல், பொருளாதாரம், சிறுகதை, நேர்காணல், சினிமா பற்றிய தெளிவான பார்வை இப்படி பல்சுவை இதழாக சிறப்பு மிகு பெட்டகம். மகிழ்வின்மழை அதுவே அந்திமழை.

ஹேமலதா, வெண்டையம்பட்டி

மர்மமாளிகை

மஹாராஷ்டிரா ஒரு மர்ம மாளிகையாக, பதவிவெறி பைத்தியங்களாக அரசியலை அசிங்கப்படுத்தியதில் எந்த கட்சி செய்தது சரி அல்லது தப்பு என்று எப்படி தீர்மானிப்பது? அவசரப்பட்டு ஆட்சி அமைத்து மூக்குடைந்த பாஜக பொறுத்திருந்து கர்நாடகா ஃபார்முலாவை கடைபிடிக்கலாம். சரத்பவாரும், அஜித்பவாரும் ராசியானதுபோல, சிவசேனாவும், பகையான பங்காளி பாஜகவும் உறவாடலாம். பவார் பவர் குறையலாம். மொத்தத்தில் கொள்கை களை காற்றில் பறக்கவிட்டு, காங்கிரஸும் சிவசேனாவும் கைகோத்ததில் யாருக்கு லாபம்?

அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை

தெளிவு

கால்நடைமருத்துவர் வே. ஞானபிரகாசத்தின் பணியிடை ஆய்வுகளில் சந்தித்த அனுபவங்கள், இங்கே இன்றளவும் அரசுத்துறைகளில் நிகழும் சூழலைச் சரியாகவே சுட்டிக் காட்டின. தன்னம்பிக்கை மிக்க ராம்மூர்த்தியின் வாழ்வு பலருக்கும் வழி காட்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி இருந்தார் ஜி. கௌதம். 'ப்போடா' சிறுகதை, சுழலில் பயணிக்கும் பரிசலின் வேகத்தில் கடைசிவரை இழுத்துச்சென்று இறுதியில் ஒரு தெளிவைத் தந்தது. திரைவலம் பகுதியும் கனகச்சிதமான கத்திரிக்கணிப்பு. சரியான ஆய்வுப் பார்வை. இனிப்பான ஆபத்து& சிறப்புப் பக்கங்களில் பல விவரங்களையும் திரட்டித் தந்து இருந்தாலும், அப்பக்கங்கள் முழுமையான நிறைவைத் தரவில்லை.

கந்தமாறன், சென்னை

சூப்பர்

டிசம்பர் மாத அந்திமழை அட்டை படம் டபுள் சூப்பர். ஓவியங்கள் வரைந்தவருக்கு வைர மோதிரம்தான் போடணும். சர்க்கரை நோய் பற்றிய டாக்டர் மோகனின் பேட்டி சூப்பர். கடைசி கேள்விக்கான பதில் டபுள் சூப்பர்.

முரளிதரன் மதுரை.

காலம் பதில் சொல்லும்

யுனெஸ்கோ கூரியர் இதழையும் அதன் ஆசிரியர் மணவைமுஸ்தபாவின் அறிவியல் பணிகளையும் நினைவுகூர்ந்து இன்றைய தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்திய திருமாவேலனுக்கு நன்றி. ‘‘ப்போடா'' சிறுகதை மலைக்க வைத்தீர்கள் உங்களுக்கு பி.பி சுகர் இருக்கா! என்று கேட்டு ‘இருக்கு' என்றால் ‘ எனக்கும் இருக்கு' என்று சந்தோஷப்படும் மக்கள் மிகுந்த சமூகத்தில் இலவச ஆலோசனைகளும், மருத்துவ குறிப்புகளும் தாராளமாக கிடைத்து குழப்புகின்றன. திடீர் மாரடைப்பு மரணங்கள் பயமுறுத்துகின்றன. நல்லவேளை, நீரிழிவு வியாதி அல்ல. உடலில் ஏற்படும் சிறுகுறையே. கட்டுப்பாட்டில் வைத்தால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம் என்று டாக்டர் வி. மோகன் மூலம் தெளிவுவந்தது. இனிப்பான ஆபத்தை சிறு விபத்தாக கருதி கடக்க 23 பக்கங்களை ஒதுக்கி, எங்கள் உடல் நலனில் உங்களுகுத்தான் எவ்வளவு அக்கறை! என்று மலைக்க வைத்துவிட்டீர்கள். மகிழ்ச்சி மல்லிகா அன்பழகன், சென்னை கடிதங்கள் சி வானவில் 4 üùாஓ 2020 / னீமூஊக்ஷ¬ெ மனிதமனதில் தோன்றும் பழிவாங்கும் எண்ணத்தையும் அதே நேரத்தில் இரங்கும் இளகிய உள்ளத்தையும் அழகிய கவிதையாக வடித்துள்ளார். சி வபாலனின் தூரிகைப் பக்கங்களில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் அருமை. பவார் குறித்த அரசியல் கட்டுரையில் காயம் பட்ட புலியாக பாஜ கவை சித்திரித்தமைக்கு காலம் பதிலளிக்கும்.

கணேஷன், திருச்செந்தூர்

விரிவு

திருமாவேலனின் 'அவர்கள் அவர்களே!' சொற்களோடு மல்லுக்கு நின்ன மணவை முஸ்தபா கட்டுரை எனது கல்லூரி நாட்களில் ‘யுனெஸ்கோ கூரியர்' படித்து அதன் மூலம் எனது பார்வை விரிவடைந்ததை மறக்க இயலாது. ஒவ்வொருமதமும் அந்திமழை சாரல் மழையாக குற்றாலத்தில் இருப்பது போன்ற மன நிறைவைத்தருகிறது. இளையதலை முறையின் எழுத்துகளைப் பார்க்கும்போது பேருவகைபெறுகிறேன்.

ஆறுமுகம், திருநெல்வேலி

சிலிர்ப்பு

யுனேஸ்கோ கூரியரின் ஆசிரியர் மணவை முஸ்தபா குறித்த தொகுப்பு சிந்திப்பை சிலிர்ப்பைத் தந்தது! நடமாடும் பல்கலைக்கழகம் என்ற எல்லை தாண்டி நடமாடும் உலகம் என்று திருமாவேலன் வர்ணித்தவிதம் மிகச் சரியாகவே தோன்றியது. அன்புக்கும் அறிவுக்குக்ம் முஸ்தபா சிறந்த எடுத்துக்காட்டு என்பதை எடுத்துக்காட்டிய விதம்கூட எடுப்பாக உள்ளது.

விநாயகராமன், நெல்லை

பொங்கின விழிகள்

முதுகுவலிக்கு ஆஸ்பத்திரியில் நடந்த சிகிச்சையில் ரணப்பட்ட ராமமூர்த்தியின் குடும்பமே பட்ட அவஸ்தைகளை கௌதம் தொகுத்த விதம் விழிகளின் சொட்டானது! என்றாலும் அலைக்கழிப்புகள், அவலங்கள் எனப் பல அனுபவங்களைத் தாங்கி வீல்சேரில் மட்டுமே வாழ்க்கை என்றாலும் ‘ எஞ்சி னியர்' கனவு சிதைந்த நிலையிலும் மாணவச் செல்வங்களுக்கு டியூசன் எடுத்தே காலம் தள்ளும் கோலம் நாளுபேருக்கு நல்லது என்றாலும் அந்த நல்லவருக்கு இனியேது பொற்காலம் என்று எண்ணி பொங்கின விழிகள்.

மணிமாறன், இடையன்குடி

இனிப்பான ஆபத்து

டிசம்பர் இதழ் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆபத்தையும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகளையும், சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைகளையும் அள்ளி வழங்கியிருப்பது பாராட்டுகிறது. அந்திமழை இளங்கோவன் இனிப்பான ஆபத்து என நிறுவியுள்ளார். முத்துமாறனின் குழந்தைகளின் இனிப்பு உலகம், டாக்டர் வி. மோகன் நேர்காணல், சித்த மருத்துவர் கு.சிவராமன், போன்றோரது கட்டுரைகள் மிக பயன்தரும் வகையில் இருந்தது.

நவீன்குமார், நடுவிக்கோட்டை

பாதகமில்லாத ஆபத்து!

இனிப்பான ஆபத்து அந்திமழை இளங்கோவன் அறிவுறுத்திய ஸ்டைல்கூட இனிப்புத்தான். என்றாலும் பாதகமில்லாத இனிப்பு என்பதால் இப்பக்கங்களையும் பாதுகாத்துள்ளோம். சுகர் நோயால் ஃபிகர் பாதிக்கா வண்ணம் பார்த்துப் பார்த்து நடந்துகொள்ளத்தான்.

கல்யாணி, மணலிவிளை

தரிசனம்!

தூரிகையா என்று மனம்பேரிகை கொட்ட விழிகளை ஓட்டினேன். ...ஸாரி ஒவ்வொரு ஓவியத்தின் மீதும் பல நிமிடங்கள் விழிகளை ஓட்டினேன்! நீர்வண்ண ஓவியங்களைத்தந்த சிவபாலன்கூட கலைத்தாயினால் நமக்கருளப்பட்ட சீர்தான் என்று நேர்பட உரைத்தது மனசு! பண்டைய பண்பாட்டின் படி மாட்டுவண்டியில் சாமி ஊர்வலக்காட்சியை கண்முன் நிறுத்தியதில் தரிசனம் சிவன் மட்டும் அல்ல சிவபாலனும்தான்!

சுரேஷ், பெரியதாழை

பொறுப்பு உண்டா?

மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கத்தேவையான மெஜாரிட்டி தெரியாமல் ஒரு மாதம் இழுத்தடித்தது ஆள் நம்பிக்கை பாதி. தாள் நம்பிக்கை பாதி, அதிகார நம்பிக்கை மீதி என்று ‘ பாஜக' அவசரம் காட்ட எதிரொலித்த அவலத்தில் ‘ பவார் பவர்!' வெளிப்பட்டுள்ளது. என்றாலும் ‘முன்மாதிரி'கள் சரியில்லை என்பதால் ‘ நான் மாதிரி' ஆட்சி தொருமா என்பதில் சந்தேகம்தான்! வருடத்திற்கு ஒரு தீபாவளி வந்தாலே நலிகின்ற குடும்பங்கள் ஏராளம். அரசியல்வாதிகளுக்கோ அடிக்கடி தேர்தல் தீபாவளிகள் தொடர்கிறது! எனவே பவார் பவரும் தொடருமா? என்றால் ‘ நெவர்' என்பதுதான் பதில்! இதில் கவலைப்படவேண்டிய பொறுப்பு ‘பாஜக'விற்கு இருந்தாலும் பொறுப்போடு நடக்குமா என்றால் அதன் மீதும் வெறுப்பு வரும் படியாகத்தான் நடந்துகொள்ளும்.

ஆர்ஜிபாலன், திசையன்விளை

logo
Andhimazhai
www.andhimazhai.com