அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Published on

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், நீதிமன்றக் காவலை ஜூலை 26ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலியின் காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது. இது கடந்த 28 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி வாயிலாக ஆஜரானார்.

அவரிடம் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இரண்டாவது முறையாக 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜி ஜூலை 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com