தி.மு.க. நீட் உண்ணாவிரதம் மதுரையில் மட்டும் மாற்றம்!

தி.மு.க. மாணவர் அண்
தி.மு.க. மாணவர் அண்
Published on

நீட் விவகாரத்தில் ஆளுநரைக் கண்டித்து திமுக மருத்துவ, மாணவர், இளைஞர் அணிகள் நடத்தும் உண்ணாவிரதம், அதிமுக மாநாட்டை முன்னிட்டு வரும் 23ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன்னரே செய்யப்பட்டு, ஒரு மாதமாக அதற்கான வேலைகள் மும்முரமாக செய்யப்பட்டுவந்தது. மாநாடு நடைபெற ஒரு வாரம் இருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து அதே நாளில் நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியையும் மைய அரசையும் கண்டித்து உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை அதிமுக தரப்பில் கடுமையாக எதிர்த்ததுடன், மாநாட்டைச் சீர்குலைக்கவே இப்படி செய்வதாகவும் குற்றம்சாட்டினர். அதிமுக மாநாட்டுக்கு 15 இலட்சம் பேர் திரள்வார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இதனால் நகருக்கு உள்ளேயும் நகரைச் சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், காவல்துறையின் சார்பில் வாகன ஒட்டிகளுக்கு நான்கு பக்க அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை திமுக நடத்தும் உண்ணாவிரதத்தில், சென்னையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் இதைத் தொடங்கிவைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் 23ஆம் தேதிக்கு உண்ணாவிரதம் நடத்தப்படும் என அக்கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com