ஏற்றுமதி தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம்: முதலமைச்சர் பெருமிதம்!

ஏற்றுமதி தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம்: முதலமைச்சர் பெருமிதம்!
Published on

கடந்த ஆண்டுக்கான ஏற்றுமதிக்கு தயார்படுத்துதலுக்கான மாநில தரவரிசையை நிதிஆயோக் அமைப்பு வெளியிட்டது. அதில், 80.89 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இது தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான மாநிலத்தின் தரவரிசையை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். வாகனங்கள், தோல் மற்றும் ஜவுளி துறைகளுக்கான ஏற்றுமதியில் நீண்டகாலமாக முன்னணியில் இருப்பதாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் அண்மையில் முதலிடத்துக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நமது திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் நமது தொழில் துறை கட்டமைப்பின் பலத்தை இந்த சாதனை வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com