ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்ற இளம் பெண்!

ஒரே பிரசவத்தில் பெற்றடுக்கப்பட்ட 6 குழந்தைகள்
ஒரே பிரசவத்தில் பெற்றடுக்கப்பட்ட 6 குழந்தைகள்
Published on

பாகிஸ்தானைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத்(27) கடந்த 18ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் 19 தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 6 குழந்தைகளையும் மருத்துவர்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளனர்.

4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com