இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஐ.எஸ்.-ஐ அழித்ததைப் போல ஹமாசை அழிக்க ஆதரவு கேட்கிறது இஸ்ரேல்!

Published on

ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க ஆதரவளித்ததைப் போல ஹமாஸ் இயக்கத்தையும் அழிக்க ஆதரவளிக்கவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் மீண்டும் வெடித்துள்ளது. இஸ்ரேல் படையினர் மீது ஹமாஸ் போராளிக் குழு நடத்திய தாக்குதலில் இரு தரப்புகளிலும் நேற்றுவரை 1,100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் 130 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "இஸ்ரேல் போரில் ஈடுபட்டுவருகிறது. இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான முறையில் எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை என்றாலும், முடித்துவைக்கும். எங்களைத் தாக்கத் தொடங்கியதன் மூலம் அவர்கள் வரலாற்றுத் தவறை இழைத்திருக்கிறார்கள்; இதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இஸ்ரேலின் எதிரிகள் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு எங்களின் அடுத்த தாக்குதல் இருக்கும்.” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

”ஹமாஸ் அமைப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைப் போன்றது. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐத் தோற்கடிக்க நாகரிக சக்திகள் ஒன்றுபட்டது போல, ஹமாஸைத் தோற்கடிக்கவும் ஆதரவளிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இஸ்ரேலிய இராணுவம் முன் எப்போதும் இல்லாதபடி ஹமாஸுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது." என்றும் இஸ்ரேல் அதிபர் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com