190 கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்!

தனது உறவினரை தழுவிக்கொள்ளும் உக்ரைன் போர் கைதி
தனது உறவினரை தழுவிக்கொள்ளும் உக்ரைன் போர் கைதி
Published on

ரஷ்யாவும் உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன.

ரஷ்யா, உக்ரைன் இடையே சுமார் 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது.

இது குறித்து ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்யா போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர். ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com