லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: பலி 492 ஆக உயர்வு!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காட்சி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காட்சி
Published on

லெபனான் மிது இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் 35 சிறார்கள், பெண்கள் உள்பட 492 உயிரிழந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இரவோடு இரவாக 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

காஸா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு வடக்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

இந்தநிலையில், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்திட இஸ்ரேல் விமானப் படைகள் முனைப்பு காட்டிய நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 35 சிறார்கள், பெண்கள் உட்ப 492 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம், லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com