அமெரிக்க அதிபர் டிரம்பின் முகநூல் பக்கத்துக்கு முன்னர் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் அதனால் அவர் முகநூலை விட்டுப் போவதுமாக பிரச்னை நீடித்துவருகிறது.
ஒரு காலத்தில் முகநூல் உட்பட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிரம்ப் தன்னைப் பற்றி மிகையான சித்திரத்தை உருவாக்கி வாக்குகளைத் திரட்டிக்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020 அமெரிக்க அதிபர்தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை ஏற்கமுடியாது என டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டத்தை முற்றுகையிட்டு களேபரம் செய்தனர். டிரம்ப் அதை ஆதரித்த காரணத்தால், அவருடைய முகநூல் பக்கத்துக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.
அவருடைய முகநூல், இன்ஸ்டாகிராம் இணைந்த மொத்த தொடர்பார்வையாளர்கள் 6 கோடி பேர் என இருந்தநிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் அவருடைய பக்கங்களுக்கான தடையை மெட்டா விலக்கியது. ஆனால், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில், டிரம்பின் முகநூல், இன்ஸ்டா கணக்குகளுக்கான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக மெட்டா இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களை சமமாக நடத்தவேண்டும் என்கிறபடி இந்தத் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மெட்டா விளக்கம் அளித்துள்ளது.
முன்னைய 2021 தடைக்கு முன்னர்வரை டிரம்பின் முகநூல் பதிவுகள் அடிக்கபடி மிக அதிகமான அளவுக்குப் பரவும்படியாக இருக்கும்.
முகநூலில் மட்டுமல்ல யூட்டியூப், டுவிட்டரிலும் டிரம்புக்கு தடை விதிக்கப்பட்டது.
எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதும் வாக்கெடுப்பு நடத்தி டிரம்புக்கு அனுமதி அளித்தார்.
பிற சமூக ஊடகங்களின் தடையால், ட்ரூத் சோசியல் எனும் பெயரில்தானே ஒரு சமூக ஊடகத்தைத் தொடங்கிய டிரம்ப், அதைப் பயன்படுத்தத்தொடங்கினார். இப்போதும் அதில் முதலில் பதிந்தபிறகே மற்ற சமூக ஊடகங்களில் தன்னுடைய இடுகைகளை அவர் வெளியிடுகிறார்.