அட்ரா சக்கை, 25 புள்ளிகள்... இளசுகளின் மனம் கவர்ந்த கமலா ஹாரிஸ்!

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிரான உத்தேச வேட்பாளர் இப்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு இளைஞர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்திருப்பது, தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ஜோ பைடன், திடீரென போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாகவும், தனக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட விரும்புவதாகவும் அவரின் பெயரை முன்மொழிந்தார். முறைப்படி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா அறிவிக்கப்படவில்லை என்றாலும் அவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைத் தாண்டி அவருடைய ஆதரவு பெருகிவிட்டது.

உத்தேச வேட்பாளராக அவருக்கு இப்போதே பிரச்சாரம் தொடங்கிவிட்டது. அண்மையில் எடுக்கப்பட்ட தேசிய அளவிலான ராய்ட்டர்ஸ்/ இப்சாஸ் கருத்துகணிப்பில் கமலா, 44%க்கு 42% எனும் கணக்கில் டிரம்பைவிடக் கூடுதலாக ஆதரவைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக, இளம் வாக்காளர்களிடம் குறைந்த காலத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார் கமலா. டிக்டாக்கில் கமலாவின் செல்வாக்கு பெரிய அளவில் இருப்பதாக பல தரப்பினரும் குறிப்பிடுகின்றனர்.

டிரம்பின் முன்னாள் ஊழியரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான அலிஷா பரா, டிக்டாக்கில் கமலா 24 மணி நேரமும் கிடப்பார்; ஆனால் டிரம்ப் இன்னும் அந்தப் படியைக்கூடத் தொடங்கவில்லை என அமோகமாகப் பாராட்டுகிறார்.

சமூக ஊடகங்களில் ஏராளமானோர் மீம் ஆளாகப் பார்த்த கமலாஹாரிஸ், ஏதோ ஒரு வகையில், பைடனையும் டிரம்பையும்விட கவர்ந்து இழுத்துவிட்டார். 81 வயது அதிபரையும் 78 வயது முன்னாள் அதிபரையும்விட கமலா தங்களுக்கு நெருக்கமானவராகத் தோன்றுவதாக இளைஞர்கள் நினைக்கிறார்களாம்.

இப்போதைக்கு, டிரம்பைவிட 25 புள்ளிகள் அளவுக்கு இளைஞர்களிடம் முன்னிலையில் இருக்கிறார், கமலா ஹாரிஸ்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com