ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை 39 ஆயிரம் பாலஸ்தீனர்களும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர்தான் குறி எனக் கூறி முக்கால்வாசி காசா நகரையே இஸ்ரேல் படை அழித்துவிட்டது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவரை, தெஹ்ரான் நகரில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் அவரும் அவரின் மெய்பாதுகாவலர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகலை ஹமாஸ் அமைப்பே உறுதிப்படுத்தியிருந்தாலும், இஸ்ரேல் இதுதொடர்பாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.