அமெரிக்க அதிபர் தோ்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
தனக்குப் பதிலாக அதிபர் வேட்பாளர் ஆவதற்கு துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பா் 5ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அதிபா் ஜோ பைடன் களத்தில் இருந்தாா். குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், 81வயதாகும் பைடன் தேர்தல் பிரச்சாரத்தில் தடுமறுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல், டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியது விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவரின் சொந்தக் கட்சியினரே மிகுந்த அழுத்தம் அளித்து வந்தனா்.
இந்த நிலையில், அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் நேற்று அறிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில்,
’அதிபராக அமெரிக்கா்களுக்கு சேவையாற்றுவதே எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம். அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். அதிபராக எஞ்சிய பதவி காலத்தில் எனது கடமைகள் மீது மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். எனது முடிவு தொடா்பாக நாட்டு மக்கள் இடையே விரைவில் விரிவாக உரையாற்றுவேன்.
‘கடந்த 2020ஆம் ஆண்டு நான் அதிபா் தோ்தலில் போட்டியிட்டபோது கமலா ஹாரிஸை துணை அதிபராக தோ்வு செய்ய வேண்டும் என்பதே எனது முதல் முடிவாக இருந்தது.
தற்போதைய அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் காண வேண்டும் என்பதற்கு எனது முழு ஆதரவு மற்றும் ஒப்புதலை வழங்குகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், அடுத்த அதிபா் வேட்பாளராக துணை அதிபா் கமலா ஹாரிஸின் பெயரை முன்மொழிந்துள்ளாா். இவர் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர்.
பைடன் விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ‘நோ்மையில்லாத பைடன் அதிபா் தோ்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவா்’ என்று விமா்சித்துள்ளாா்.