காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக காசா குடிமக்கள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதுவரை ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 440 பேரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. நேற்று லெபனான் மீது மீண்டும் வான் தாக்குதல் நடத்தியது.
அதன்பின்னர் இன்று அதிகாலையில் காசாவில் வான் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். மத்திய டேய்ர் அல்-பாலாவில் உள்ள மசூதி வளாகத்தில் அமைந்துள்ள நிவாரண முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த மசூதியில் இருந்து, ஹமாஸ் ஆயுதப்படையினர் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில், மசூதியில் தஞ்சமடைந்திருந்த பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு பலத்த கயம் ஏற்பட்டுள்ளதகவும், இதன் காரணமாக, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.