பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 15 மாணவர்கள் உயிரிழப்பு!

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 15 மாணவர்கள் உயிரிழப்பு!
Published on

செக் குடியரசிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 போ் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

செக் குடியரசின் தலைநகரான ப்ராகிலுள்ள சாா்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரியில் இருந்தவர்களை நோக்கி இளைஞர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்த தகவலறிந்ததும் போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து கண்காணிப்புக்குள் கொண்டு வந்தனர். இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவரின் பெயா் டேவிட் கோஸக் எனவும், அவா் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவா் எனவும் பின்னா் தெரியவந்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை என்று உள்துறை அமைச்சர் விட் ராகுசன் தெளிவுபடுத்தியுள்ளாா்.

செக் குடியரசு வரலாற்றிலேயே இந்தத் துப்பாக்கிச்சூடுதான் மிக மோசமான தாக்குதல் சம்பவம் என்று கூறப்படுகிறது.

அந்த நாட்டில் துப்பாக்கி வன்முறைகள் மிகவும் அரிது என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com