இந்தோனேசியக் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய மூன்று இந்தியப் பொறியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
லெஜண்ட் அக்வாரிஸ் எனும் கப்பல் ரியாவ் தீவுகளுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது, அதில் இந்தோனேசிய அதிகாரிகள் தேடுதல்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் 106 கி.கி. கிரிஸ்டல் மெத்தாபேட்டமைன் போதைப் பொருளைக் கைப்பற்றினர்.
சரக்குக் கப்பலான அதை இந்தோனேசியாவைச் சேர்ந்த மாலுமி உட்பட 10 பேர் இயக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் மூன்று சிங்கப்பூர் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றவர்களும் இருந்தனர். கப்பல் பொறியியல் படித்துவிட்டு அதுதொடர்பான வேலையில் இருந்துவந்த அவர்களே, குறிப்பிட்ட போதைப்பொருளைக் கடத்தியவர்கள் எனத் தெரியவந்தது.
முதலில் சிங்கப்பூரிலிருந்து கடந்த 9ஆம் தேதியன்று புறப்பட்ட சரக்குக் கப்பல், மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள தனியார் துறைமுகத்துக்குச் சென்றது. அங்கு 12ஆம் தேதியன்று இந்த மூவரும் போதைப்பொருளை வைத்ததாகவும் அப்போது இந்தோனேசியாக்காரர்களை கடலிலிருந்து வெளியேறி கரையில் இருக்கும்படி கூறியதாகவும் இந்தோனேசியக் காவல்துறை நேற்று தெரிவித்தது.
அந்நாட்டுச் சட்டப்படி போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனைவரை விதிக்கப்படும் என்பது தெரிந்ததே!