அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி!

Posted : சனிக்கிழமை,   மே   15 , 2021  16:06:22 IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஓட்டனந்தல் கிராமத்தில் ஊர்பஞ்சாயத்து தலித் பெரியவர்களை சாதி இந்துக்கள் காலில் விழவைத்து வன்கொடுமை செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் இயக்குநர் இரமேஷ்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஓட்டனந்தல் கிராமத்தில் 60 - க்கும் மேற்பட்ட பட்டியல் சாதியினரும் (பறையர்), 250 -க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசித்து வருகின்றார்கள்.

தலித் மக்கள் அவர்களது பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் இது மே மாதம் என்பதால், கடந்த 09 -ம் தேதி தொடங்கி 11 -ம் தேதி வரை மூன்று நாட்கள் திருவிழா நடத்தியுள்ளனர். அதில் 12-ம் தேதி அன்று தலித் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசளிப்பு விழாவும் நடத்தியுள்ளனர். அன்று இரவு சுமார் 08.30 மணியளவில் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் இருந்து சென்ற காவலர்கள் கொரோனா நேரத்தில் திருவிழாவிற்கு நடத்தியதற்கு எச்சரிக்கை செய்துவிட்டு மைக் செட், ஒலிபெருக்கி மற்றும் வாகனம் அனைத்தையும் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்த ஒலி, ஒளி பெருக்கி அதே ஊரில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானதாகும்.

மறுநாள் 13.05.2021 அன்று காலை சுமார் 11.00 மணியளவில் தலித்துகள் சுமார் 10 நபர்கள் சேர்ந்து மேற்படி திருநாவலூர் காவல்நிலையத்திற்கு சென்று, காவல் அதிகாரிகளிடம் திருவிழா நடத்தியது தவறு என்றும், இனி இப்படி செய்யமாட்டோம் என்றும் வருத்தம் தெரிவித்து, இரவு போலீசார் எடுத்துச் சென்றிருந்த ஒலி ஒளி பெருக்கிப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது இரவு 08.00 மணி இருக்கும். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரும், பா.ம.க. கட்சியின் கிளைக் கழகச் செயலாருமான ரமேஷ் (வயது-28) தலித் மக்களை வழி மறித்து, ”நான்தான் காவல்நிலையத்திற்குத் தகவல் சொன்னேன், வீடியோ எடுத்து அனுப்பினேன். நாங்களே இன்னும் திருவிழா நடத்துல.. அதுக்குள்ள நடத்துற அளவுக்கு பெரிய ஆளாடா நீங்க?... உங்களைக் கொலை பண்ணாலும் கேட்க ஆளு இல்ல, என்னடா பண்ண முடியும்” என்று கூறி மிரட்டியுள்ளார்.

மறுநாள் 14.05.2021 அன்று காலை சுமார் 09.00 மணியளவில் ஊர் பஞ்சாயத்துக் கூட்டியுள்ளனர்.  வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களான பாலகிருஷ்ணன், ராமலிங்கம், புருஷோத்தம்மன், கோகுல்ராஜ் மற்றும் ராமசுந்தரம் உள்ளிட்ட பலர் ஊர் பஞ்சாயத்தை நடத்தியுள்ளனர். தலித் மக்கள் குடியிருப்பைச் முக்கியஸ்தர்களான சந்தானம் (70), திருமால் (60), ஆறுமுகம் (65), முருகன் (38), திருவேங்கடம் (55) ஆகியோரை அழைத்து, ”எப்பவும் நாங்க திருவிழா நடத்தி முடித்த பிறகுதானே நீங்க திருவிழா நடத்துவீங்க.. இது என்ன புது பழக்கமா இருக்கு.. பறப்பசங்களுக்கு அவ்வளவு திமிர் ஆயிடுச்சா… நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது… அறுத்துவிடுவோம்” என்றும் மிரட்டியுள்ளார்கள்.

அதற்கு தலித் பெரியவர் சந்தானம் என்பவர் ’’இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது’’ என்று கூறியுள்ளார். அதற்கு சாதி இந்து வன்னியர் சமூகத்தினர் ”இப்ப நீங்க இவ்வளவு திமிரா நடந்துகிட்டதுக்கு மன்னிப்பு கேளுங்க.. அப்பதான் சரியாகும்” என்று கூறியுள்ளனர்.அதற்கு காலனியில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள் எந்தவிதமான பிரச்சனையும் வேண்டாம் மன்னிப்புதானே கேட்கலாம் என்றுகூறி, வெற்றிலைப் பாக்கு, 500 ரூபாய் பணம் வைத்து பஞ்சாயத்து நடத்திய வன்னியர்களின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் இளைஞர் முருகன் (38) என்பவரை, பா.ம.க-வைச் சேர்ந்த சுரேஷ் (20) என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

அப்போது, தலித் பெரியவர்கள், நாங்கள் மன்னிப்பு கேட்டபிறகும் எங்க பசங்களை அடிக்கவும் செய்கிறீர்களே என்று கேட்டுள்ளனர். அதன் பிறகு மீண்டும் தலித்துகளைத் தாக்கியுள்ளார்கள்.

இந்நிலையில், தலித்துகள் தங்களைத் தாக்கியதாக வன்னியர் சமூகத்தினர் தலித்துகள் மீது பொய்யான புகாரை திருவெண்ணய்நல்லூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். இத்தகவல் அறிந்தே தலித் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழிவு குறித்தும், கட்டப்பஞ்சாயத்து நடத்தி, காலில் விழ வைக்கப்பட்டது குறித்தும் புகார் அளித்துள்ளனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...