அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய் சேதுபதி, வெற்றிமாறன் ஸ்டாலினுக்கு கடிதம்!

Posted : புதன்கிழமை,   மே   05 , 2021  17:49:31 IST

தமிழக முதல்வராகப் பதவியேற்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், 14 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள்.

 
விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்பட 67 பேர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் 14 கோரிக்கைகள் கொண்ட கடிதம் ஒன்றையும் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில் ஸ்டெர்லைட், கூடங்குளம், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 
முன்னதாக ஸ்டாலினை சந்தித்தது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்ததாவது, தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானும் எனது மனைவி, தயாரிப்பாளர் கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்து கூறினோம். அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போது உள்ள சூழலையும், அதனால் பென்ஷன் பெற முடியாமல் இந்த கொரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையையும் எடுத்துக் கூறினேன். கண்டிப்பாக ஆவண செய்கிறேன் என்று கூறினார். அதற்கு அவருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மேலும், முதல்வராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...