அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடியாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   10 , 2021  10:31:43 IST

புதிய வேளாண் சட்டங்களில் விவசாயிகள் கூறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்த மாற்றமும் இருக்காது, விவசாய மண்டிகள் அகற்றப்பட மாட்டாது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அரசு முன்மொழிந்தது.
 
ஆனால், புதிய வேளாண் சட்டங் களை அடியோடு நீக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் விவ சாயிகள் உறுதியாக இருந்ததால், இந்தப் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
 
விவசாயிகள் தங்கள் வீடுகள், பகுதிகளில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
 
இந்தநிலையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது. அதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அதில் மாற்றங்களும் செய்யப்பட்டு விட்டன.
 
இப்போது கூட விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதேசமயம் புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறும் கோரிக்கையை ஏற்க முடியாது. அதுதவிர வேறு பிற சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்கலாம். மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்.' எனக் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...