அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உந்திச்சுழி - கூத்துப்பட்டறை நாடக நிகழ்வு

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   16 , 2014  19:25:17 IST


Andhimazhai Image

 

முப்பது ஆண்டுக்கு முன்பு அரங்கேற்றிய ஒரு நாடகம், மீண்டும் அரங்கேறுகிறது என்பதே சுவாரசியம்தான். முப்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறையின் காலம். அதற்குள் காலம் எவ்வளவோ மாற்றங்கள் கண்டிருக்கும்.

கூத்துபட்டறையில் நடந்த உந்திச்சுழி நாடகம்தான் அது. லலித் கலா அகாடமியின் புல்தரையில் அமர்ந்து ஞானராஜசேகரனின் வயிறு என்ற சிறுகதையில் இருந்து இந்த நாடகத்தை உருவாக்கினேன் என்றார் நாடகத்துக்கு முன்னதாகப் பேசிய ந.முத்துசாமி. அந்த நாடகத்துக்கு அன்றைக்கு ஒளி அமைத்த ரவீந்திரன், அன்றைக்கு இயக்கிய கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நாடகத்துக்கு வந்திருந்தனர். கலைவிமர்சகர் சதானந்த் மேனனையும் காண முடிந்தது. இந்த நாடகம் சென்னை மியூசியம் தியேட்டரில் அரங்கேறியபோது அதைக் கேட்ட கவின்கலைக் கல்லூரி முதல்வர் பாரிஸ் நகரில் ஒரு நாடகத்தைப் பார்த்ததுபோல் இருந்தது என்று பாராட்டினார் என்று பெருமையுடன் நினைவுகூர்ந்தார் முத்துசாமி. அவருடன் ஒரு வெள்ளைப் பூனையும் நடுநாயகமாக அமர்ந்துகொண்டு அவர் பேச்சைக் கேட்டது. பின் தன் இருக்கைக்கு அவர் திரும்பியபோது அவர் காலடியில் படுத்துக்கொண்டது.

  முட்டையிலிருந்து ஒரு மனிதன் பிறப்பதாகத் தொடங்கியது நாடகம். தொப்புள்கொடி இல்லாமல் பிறக்கும் அவனை தந்தை தன் மகன் அல்ல என்று சொல்லிப் பிரிந்துசெல்கிறான். அதைத் தொடர்ந்து ஆண் பெண் உறவுகள், உரிமைகள், சமூக விதிகள் என எல்லாவற்றையும் மீறவும் கேள்விக்குள்ளாக்கவும் செய்யும்விதத்தில் நாடகம் விரிந்து செல்கிறது. ’’தொப்புள்கொடியை முறுக்கி எடுத்து கழுத்தில் போட்டுக்கொண்டு போய்விட்டான் என் அப்பன்” என்று தந்தையைப் பற்றிச் சொல்கிறான் முட்டையிலிருந்து வந்த மனிதன். அவனுக்கு சகோதரியாக வரும் உயரமான இளம்பெண்  மிகவும் சுறுக்கென்று குத்தும் விதத்தில் வசனங்களைப் பேசுகிறார். அவள் மிக எளிதாக உறவு எல்லைகளை மீற பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கோ பதறுகிறது. 

இந்த நாடகத்தை இயக்கியவர் ஹார்ட்மன் டிசவுசா. இணை இயக்கம்: ஆண்டிரியா பெரைரா. முட்டையிலிருந்து வெளிவந்த மனிதனாக நடித்த பாஸ்கர், இளம்பெண்ணாக நடித்த ரஜிதா இருவரின் நடிப்பை பாராட்டவேண்டும்.

இந்த நாடகம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அரங்கேறியபோது எம்மாதிரியான அதிர்ச்சி அலைகளை அன்றைய சாதாரண பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் என்று யோசிக்கமுடிகிறது. சுமார் 350பேர் அந்த நாடகத்தைப் பார்த்தார்களாம்.

மானவேந்திரநாத், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் உந்திச்சுழியின் முதல் அரங்கேற்றத்துக்காகப் பணிபுரிந்ததை நினைவுகூர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் முதல்முதலில் தான் ஒளிஅமைத்தது இந்த நாடகத்துக்குத்தான் என்று நினைவுகூர்கிறார்.’’ ஒளி அமைப்பை நன்றாகச் செய்யலாமே என்று ந.முத்துசாமியிடம் நான் கூறினேன். அதைச் செய்ய ஆள் இல்லையே என்று அவர் கூற, வேண்டுமானால் நான் செய்யவா என்றுகேட்டேன். நானே அப்போது சுயமாக முயன்று சிலவற்றைக் கற்று வைத்திருந்தேன். அதைப் பயன்படுத்தினேன்” என்கிறார் தனிப்பட்ட முறையில் நம்மிடம் பேசுகையில் ரவீந்திரன்.

1981-ல் உந்திச்சுழி அரங்கேறியபோது அதில் நடித்த இருவர் இப்போது உயிருடன் இல்லை என்பதையும் அரங்கில் உரை நிகழ்த்துகையில் ந.முத்துசாமி குறிப்பிட்டார்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...