அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம்

Posted : புதன்கிழமை,   மே   12 , 2021  17:46:27 IST


Andhimazhai Image

 

 

ஓவியரும் எழுத்தாளருமான சந்தோஷ் நாராயணன் ட்யூன் என்ற குறும்படம் மூலம் தன் விஞ்ஞானக் கதை ஒன்றுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

 

மிக எளிமையாகவும் அழகான முறையிலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிகிரகம் ஒன்றில் இருந்து பூமியில் வாழும் மனிதர்களை ஆராய ஒரு குட்டி எந்திர ஜீவி ஒன்று வருகிறது. அது மனிதர்களின் இசைக்கு அடிமையாகி விடுகிறது. இதை அழிக்க அதன் தந்தை எந்திரம் வருகிறது. அதுவும் இசைக்கு அடிமையாகிவிட, வெளிகிரகத்தின் அதிபரே இவற்றை அழிக்க வருகிறார் என்கிற ஜகஜ்ஜாலக் கதையை எடுத்துள்ளார் சந்தோஷ்.

 

இந்த எந்திரங்களுக்கு மிகவும் மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ளாமல் ஒரு ப்ளூ டூத் ஸ்பீக்கர், ஒரு எமர்ஜென்சி குழல் விளக்கு, ஒரு கொசுவிரட்டும் பேட் ஆகியவற்றை வைத்தே சோலியை முடித்துவிட்டார் இந்த மினிமலிச ஓவியர்… இல்லை இயக்குநர்!

 

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் வேண்டுமே அதற்காக குடும்ப உறுப்பினர்களையே நடிக்கவும் வைத்துவிட்டார். அவரது மகன் அபிநந்தன், மகள் காயாம்பூ இருவரும் அவ்வளவு க்யூட்டாக நடித்துள்ளனர். பாடல்களுக்கு தலை அசைப்பதிலும் ஆடுவதிலும் அவ்வளவு அப்பாவித்தனம்! அதுவும் காயாம்பூ கலக்கி இருக்கிறார்!

 

”நான் ஸ்பேஸ்ஷிப்ல இருந்து வெளியே வந்துட்டேன் பூமிக்கு போய்ட்டிருக்கேன்” என குட்டிக் குழந்தையின் குரலில் ஆரம்பமாகும் படம் உறவுகளின் வலிமையைச் சொல்கிறது. இசையின் மேன்மையை மென்மையாக சொல்கிறது. இரவின் ஒலியும், திரை இசையின் கோர்ப்பும், சையன்ஸ் பிக்‌ஷன் படங்களுக்கு உரிய ஒலி அமைப்புமாக படம் சிறப்பு. ஒளிப்பதிவு செய்த மோகின் மானஸும் மற்ற பணிகளைச் செய்தவர்களும் ’கத்துகிட்ட மொத்த வித்தையையும்’ இறக்கி உள்ளனர்.

 

இசைக்கும் அன்புக்கும் மாற்று எதுவும் இல்லை என்பதை அழகாகச் சொல்லும் அறிவியல் படம் இது!

Youtube இல் இந்த சுட்டியில் பார்க்கலாம்: TUNE - a Musical Sci-Fi Short Film in Tamil - YouTube

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...