அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

த்ரிஷ்யம் திரைப்படமும் தாஜுதீன் வழக்கு விசாரணையும்!

Posted : புதன்கிழமை,   மார்ச்   31 , 2021  14:43:50 IST


Andhimazhai Image

சில சிக்கல்களான நிகழ்வுகள் ஒரு பரபரப்பான திரைப்படத்திற்கான கதைக் களத்தைக் கொண்டிருப்பவை. அப்படித்தான் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாஜுதீன் (வயது -45) என்பவர், தான் செய்யாத குற்றத்திற்காக 54 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்ததும், சிறையில் இருந்து அவர் மீண்டு வந்ததும், தானே துப்பறிந்து அந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிந்துள்ளார். இதற்கிடையே கத்தாரில் அவருடைய வேலையும் போய்விட்டது.

 

கத்தாரில் தொழில் செய்து கொண்டிருந்த தாஜுதீன் தன்னுடைய தன்னுடைய மூத்தமகள் திருமணத்திற்காக 15 நாட்கள் விடுமுறையுடன் கத்தாரிலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி கேரளாவிற்கு வந்துள்ளார். மகளுடைய திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து காரில் வெளியே சென்றுள்ளார் தாஜுதீன். செல்லும் வழியில் இரண்டு காவல் துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததையும், அதில் ஒரு கார் சேற்றில் சிக்குண்டிருப்பதையும் கண்டவர் காரை நிறுத்தியிருக்கிறார். அப்போது, அவரிடம் காவல்துறையினர் உதவி கேட்டுள்ளனர். காரிலிருந்த தாஜுதின் மகனும் அவருடைய நண்பரும் உதவி செய்வதற்காக செல்ல தாஜுதீனும் மற்றவர்களும் காரிலேயே இருந்துள்ளனர்.

 

”கொஞ்ச நேரத்தில் காவல்துறையினரின் குரல் மாறத்தொடங்கியது. அவர்கள் என்னை காரிலிருந்து வெளியே வரச்சொன்னார்கள். நான் என்னுடைய அடையாள அட்டைகளைக் காண்பித்தேன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அவர்கள் சிசிடிவி-யில் பதிவாகியிருந்த ஒரு மங்கலான புகைப்படத்தை என் மனைவியிடம் காண்பித்தார்கள். புகைப்படத்தில் இருக்கும் நபர் என்னைப்போலவே இருப்பதாக சொன்னாள் என்னுடைய மனைவி. இதன் பின்னர் காரிலிருந்து என்னை காவல் துறையினர் இழுத்துச் சென்றனர். சப்- இன்ஸ்பெக்டர் பிஜூவும் மற்றும் காவல் துறையினரும் ஒரு கொள்ளை சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினர். என்னைத் துன்புறுத்தினர். குற்றத்தை ஒத்துக்கொள்ளும் படியும் வற்புறுத்தினார்கள்” என்றார் தாஜுதீன்.

 

சிறையில் அடைக்கப்பட்ட தாஜுதீனிடம் ஒரு நாள் முழுக்க விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், ”என்னுடைய ஆடைகள் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு வெறும் உள்ளாடையுடன் உட்கார வைத்தனர். குற்றத்தை ஒத்துக்கொள்ளும் படி கடுமையாக அடித்து துன்புறுத்தினர். எனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் காலில் அடிக்காதீர்கள் என்று கெஞ்சினேன். அவர்கள் எதையும் பொருட்படுத்தவில்லை. ஊடகத்தினர் வரும் வரை என்னை அடித்துக் கொண்டே இருந்தனர். ஊடகத்தினரை சந்திக்கச் செல்லும் போதுதான் துணி மணிகள் போட்டு அழைத்துச் சென்றனர். அப்போது என்னைப் பார்த்த என்னுடைய 7 வயது மகன் அதிர்ச்சியடைந்து போனான்” என்றார்.முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு காவல் துறைக்கு சில விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தது. சோரக்கலம் பகுதி அருகே, பெண் ஒருவரிடம் செயின் பறித்த நபர் ஒருவர் வழுக்கைத் தலையுடன் இருப்பது போன்ற தெளிவான புகைப்படம் கிடைத்துள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபர், தாஜுதீன் வீட்டின் பக்கமாக சென்றுள்ளார். அந்த நபர் தாஜுதீன் போன்று இருப்பதாக காவல்துறையினர் எண்ணியதால் தாஜுதீன் மீதான சந்தேகம் வலுத்தது. தாஜூதீன் தான் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதற்கான பல்வேறு கதைகளைக் காவல் துறையினர் உருவாகினார்கள். தாஜுதீன் த்ரிஷ்யம் பட பாணியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவருடைய மகள் திருமணத்திற்காகவும், மகன் படிப்பிற்காகவும் அதிகப் பணம் தேவைப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தாஜுதீன், நான் த்ரிஷ்யம் படத்தில் வரும்  அறிவாளி போலிருந்தால் ஏன்? திருடும்போது ஹெல்மட் அணியாமல் திருடப்போகிறேன் என்று முறையிட்டுள்ளார்.

 

இதற்கிடையே தலைசேரி நீதிமன்றம், தாஜுதீனை 54 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டுள்ளது.

 

“நான் ஜாமீன் பெற்ற பிறகு வெளியே செல்லவில்லை. நடந்த நிகழ்வுகளை முகநூலில் பதிவிட்டேன். நிறையப் பேர் எனக்கு ஆதரவளித்தனர். கத்தாரில் உள்ள நண்பர் ஒருவர் கூறினார், கண்ணூரில் உள்ள அவரது உறவினர் வீட்டருகே என்னைப் போலவே ஒருவர் இருப்பதாக. பின்னர் அவருடைய உறவினர் ஒருவருக்கு அழைத்துப் பேசியபோது, அந்த நபரின் புகைப்படம் முகநூல் விவரங்கள் என எல்லாவற்றையும் கொடுத்தார்” என்றார் தாஜுதீன்.

 

தாஜுதீனும் அவரது உறவினர்களும் நடத்திய தீவிர விசாரணையில், சிசிடிவி காட்சியிலிருந்த அந்த நபரின் கைக்கடிகாரம், காப்பு உள்ளிட்டவை முகநூல் பக்கத்தில் இருந்த மகே பூர்வீத் சரத் வல்சராஜ் என்பவரின் புகைப்படங்களுடன் ஒத்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ இப்ராஹிமின் உதவியுடன் முதலமைச்சர் மற்றும்  டிஜிபியிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும் என தாஜுதீன் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். அதன் பின்னர் டிஎஸ்பி தலைமையில் நடந்த விசாரணையில் சரத் வல்சராஜ் தான் உண்மையான குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. சரத் மற்றொரு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்ததையடுத்து அவருடைய ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது, அதனைத் தொடர்ந்து திருட்டு வழக்கிலிருந்து தாஜுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். தாஜுதீன் மீது வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ மீது அம்மாநில காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார்.

 

சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ மீது மாநிலக் காவல் துறை சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாஜீதின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

வழக்கிலிருந்து தாஜுதீன் மீண்டாலும் கத்தாரில் பஞ்சாயத்து காத்திருந்தது. இவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இவரது தொழிலில் முதலீடு செய்திருந்தவர் தாஜுதீன் மீது தலைமறைவு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அங்கே செய்த தொழிலும் சரிந்துபோய் பல நாள் போராட்டத்துக்குப் பின் ஊர் திரும்பி இருக்கிறார் தாஜுதீன். விரைவில் இந்த கதையை சினிமாவிலும் பார்க்கலாம்!click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...