அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   09 , 2021  16:23:33 IST

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வார ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது அனைத்து வகையான மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை கடை தொடக்கப்பட்ட நேரம் முதலே அதிகப்படியான மக்கள் கடைகளில் மது வாங்க வரிசைகளில் நின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நேற்று மாலை 6 மணி வரை இயங்கும் என்றும் ஞாயிற்றுக் கிழமையான இன்றும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மரக்கட்டைகள் அமைத்து மக்களை சமூக இடைவெளியுடன் நிறுத்துவதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டன. 14 நாட்கள் ஊரடங்கு என்பதால், மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி கையிருப்பு வைத்துகொள்ளும் வகையில், மதுப்பரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.100.43 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 3 மடங்கு அதிமாகும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...