அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சாராய வேட்டையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 3 போலீசார் சஸ்பெண்ட் - எஸ்பி உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   10 , 2021  11:46:13 IST

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே குருமலை நச்சுமேடு மலை கிராமத்தில் சாராய வேட்டைக்கு சென்றபோது வீட்டின் பூட்டிய வீட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரூ.8.5 லட்சம் பணத்தை திருடியதாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே குருமலை நச்சுமேடு மலை கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து, அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான 4 காவலர்கள் அங்கு சென்றுள்ளனர்.

சாராயம் காய்ச்சுவதாக அறியப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோர் வீடுகளிலிருந்த சாராயம், சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை அழைத்துள்ளனர். வீடுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், பூட்டை  உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரூ.8.5 லட்சம் பணத்தை காவலர்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சம்பம் அறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் சுபா, காவலர்களிடமிருந்து பணம், நகையை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பாக,  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,  உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது 454, 380 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்ய மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...