அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்

Posted : புதன்கிழமை,   மே   12 , 2021  21:30:02 IST

ஸ்ரீரங்கம் கோயில் 51வது ஜீயர் நியமனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இப்பதவிக்கு தகுதியுடையோர் வரும் ஜுன் 8ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, இந்து மத தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்த, சந்நியாசம் பெற்ற கோயில் ஆகமங்களையும் வழிபாட்டு முறைகளையும் அறிந்தவர்களே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகளும் அறிவிக்கப்பட்டன. இப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவோர் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் 56(1) பிரிவின் கீழ் திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர், கட்டுப்படுத்தக் கூடியவர் என்றும் குறிப்பிடப்பட்டு, ஸ்ரீீீீரங்கம் கோயில் செயல் அலுவலர், இணை ஆணையர் மாரிமுத்து & அறங்காவலர்கள் குழு பெயரில் கடந்த 6ம் தேதியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும் தகுதி, மாதிரி விண்ணப்ப படிவும் ஆகியவை கோயில் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. அரசே நேரடியாக ஜீயரை நியமிக்க இந்து கோயில் பாதுகாப்பு இயக்கம், வி.எச்.பி, பா.ஜ.க பிரமுகர் எச்.ராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், சட்டப்படியும் திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டும் ஜீயர் நியமனம் நடைபெறும். எந்தவித விதி மீறலும் இல்லை என்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், ஜீயர் நியமனம் குறித்த அறிவிப்பு, திரும்ப பெறப்பட்டுள்ளது. இணையதளத்தில் இந்த அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...