அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோல்வி:இந்தியா +21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

Posted : வெள்ளிக்கிழமை,   மே   29 , 2009  17:57:05 IST

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோல்வி:இந்தியா +21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு


ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் இலங்கையில் நடைப்ற்ற போரில் இலங்கை அரசு நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷியா உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தால் நிராகரிக்கப்பட்டது.இதன் மூலம் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை பிரதமர் மன்மோகன்சிங்கின் இந்திய அரசு நிராகரித்ததுள்ளது.


இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கடந்த இரு நாள்களாக நடந்த சிறப்புக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்து தீர்மானம் கொண்டு வந்தது.

நேற்று இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தீர்மானத்துக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ்,கனடா, சிலி, இத்தாலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் வாக்களித்தன.ஆன்னல் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து இந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.


இலங்கை நிதியுதவி கோரும் மர்றொரு தீர்மானத்தை முன்வைத்த போது.தீர்மானத்துக்கு 29 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிதியுதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

நிதியுதவி கோரும் தீர்மானத்தில் விடுதலைப்புலிகள் போரில் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்தியதாகவும், போர் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் ஏற்கனவே இந்த விஷயம் குறித்து கடந்த 26/05/2009 அன்று முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு
,'ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது, அந்த நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், எல்லை ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் கூட, தற்போது இலங்கை விவகாரத்தை ஒரு சிறப்பு அம்சமாக கருத வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்களிடம் எழுந்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்' என்று கடித மூலம் கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு இந்தியா தனது ஆதரவு நிலையை தெரிவித்தபின் தான் இலங்கைக்கு ஆதரவு பெருகியது என்பது குறிப்பிடதக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...