அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக செ.பத்மநாதன் அறிவிப்பு :வைகோ மறுப்பு

Posted : திங்கட்கிழமை,   மே   25 , 2009  08:42:25 IST

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்துவிட்டார் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசை மற்றும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டிகளில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில், '' எமது தேசியத் தலைவர் கடந்த 17ம் தேதியன்று இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி யுத்தத்தில் எதிரிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்துவிட்டார். எனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, தலைவரின் வழியிலேயே தளபதிகள் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் வீரமரணத்தைத் தழுவிவிட்டனர் என்பது எனக்குக் கிடைத்துள்ள செய்தி. மகாபாரத்தில் கூறப்படுவதுபோல, எனது இரு வெற்றிப் புதல்வர்களை தலைவர்களின் இரு பிள்ளைகள் குண்டடிபட்டு அவரின் மடியில் வந்து விழுந்தார்கள். இருந்தாலும் எம் தலைவன் எமது மக்களின் விடுதலையை நோக்கி எதிரிகளுடன் தானும் தொடர்ந்து போரிட்டு வீரமரணம் அடைந்துள்ளார். வீர மகாபுருஷனை தமிழினம் கண்டது எமக்கு பெருமைதான். தலைவரின் மனைவியும் இறுதி மகன் பாலாவும் பற்றிய செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

நடேசன் அண்ணா, பூலித்தேவன் இருவரும் கடந்த 17ம் தேதி இரவு பல தடவை என்னுடன் பேசினார்கள். எமது மக்கள் கொன்றுகுவிக்கப்படுவதைப் பார்த்து தாங்கமுடியாத துக்கத்தில், இலங்கை அரசுடன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இலங்கை ராணுவத்துடன் பேசுவதற்காக வெள்ளைக்கொடியுடன் சென்றனர். அப்போது அவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது. ஆனால், சரண் அடைய அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. போர்நிறுத்தம் ஏற்படுத்த என் மூலம் முயற்சி எடுத்தபோது எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இலங்கை அரசுடன் பேசப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

எமது தலைவரும் தளபதியும், எமது மக்களுக்கு - அவர்கள் மானிடப் பிரவிகளாக மனித இனத்துக்கு கொடுக்கவேண்டிய கவுரவம், மரியாதையுடன் வாழ, மற்ற இனத்துடன் சமமான உரிமைகளுடன் வாழ்வதற்கு உலகளாவிய தமிழ் மக்கள் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படி எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ந்து முயற்சிகளை எடுப்போம்.

எமது ஆயுதப் போராட்டம் இன்று இலங்கை அரசாங்கத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது எல்லாரும் ஏற்றுக்கொள்கின்ற ஒன்று. எமது போராளிகள் மக்களுடன் மக்களாக இருக்கின்றனர். மக்கள் எம்முடன் இருக்கின்றனர். நாமும் அதைப் புரிந்துகொண்டுள்ளோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு சமாதான வழியில் அகிம்சா வழியில் ஜனநாயக வழியில் முயற்சிகளை மேற்கொள்வோம்.

ஏற்கனவே நாம் கூறியபடி, போர்க்கருவியை வைத்துவிட்டோம். நாம் வன்முறையைத் தவிர்த்த ஏனையை வழிகளில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சியை எடுப்போம்.

வன்முறைகளைத் தவிர்ந்த வழிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அமைப்புகள், எல்லாரும் சேர்ந்து உரிமைகளை வென்றெடுப்போம். தமிழீழம் தவிர்த்த மற்ற யோசனைகளை சக பிரிவினருடன் கலந்தாலோசித்து எமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க ஆய்வுசெய்து சர்வதேச அரங்கில் எடுத்துவைப்போம். இந்த பெரிய தோல்வியைப் பற்றி ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். அமைப்பின் தலைமை கூட்டு தலைமையாக டீம் ஒர்க்காக இருக்கும். அது எங்கிருந்து இயங்குவது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்'' என்றார் பத்மநாதன்.


செல்வராசா பத்மநாதனின் இந்த அறிவிப்பை மறுத்துள்ள , இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியதலைவரும்,மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ ,'பத்மநாபனின் அறிவிப்பு துரோகச்செயல் ஆகும். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' என்று அறிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...