அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கவிதைத் திருவிழா 3 - அய்யப்ப மாதவன்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   25 , 2006  10:51:34 IST

பாதாளத்தை நோக்கி நீளும் மலையின்
விளிம்பிலிருந்து உன் விரல்களைப் பற்றிக்கொண்டிருக்கிறேன்
என்னை இசைக்கும் உன்விழிகளின் இமைகளை
பிடித்துக் கொண்டு மேல் வருகிறேன்
உன் இசையில் நிரம்பிய மலைக்காட்டில்
துள்ளி ஆடுகின்றன அனைத்தும்
நிலவு நிறைந்த குளத்தில்
அசையாத உன் பிம்பத்தில் என் விழிகள்
ஸ்தம்பிக்கின்றன
மழை விழத்தொடங்கும் காட்டில்
நனைகிறோம்
ஈரமாகும் ஆடைகளின் குளிர்ச்சியில்
நம் உடல்கள் நடுங்குகின்றன
தானாய் நீளும் விரல்கள்
உன் அங்கங்கள் தொடபதறுகிறது
நீயோ உடல் வளைந்து சூடுக்காய்
என் மீது சரிகிறாய்
நீண்டு விட்ட கைகள் தாங்கிப்பிடிக்கிறது
இரு மரங்கள் மோதினாற்போல் மோதிய உடல்களில்
தீப் பொறி தெறிக்கிறது
தீ தீயோடு கலந்து எரிகிறது
மாபெரும் காமத்தீ
காட்டின் இருளில் வெளிச்சம் பரவுகிறது
காதலின் சொற்களை எழுதி முடித்ததும்
விடிந்திருந்தது எங்கள் இரவு.

**************************

கன்னி தேவதையின் கண்களிலிருந்து விரிகிறது
காதலின் ஆழ்ந்த பார்வை
அவனின் மீது
அவன் இந்த பூமிப்பந்தின் மீது
ஒரு குழந்தையின் பாவனையோடு இருக்கின்றான்
உதடுகளைச் சப்பியபடி
அவள் இதழ்கள் திறந்து
சொற்களின் மகிமையை விளக்குகிறாû
நீ நான் அர்த்தங்களின் சுவை ஏதுமற்றது
நான் உன் விருப்பம் சார்ந்து
என் விருப்பத்தோடு சாய்கிறேன் உன் மீது
நீ என் மனம் நிறைந்து
ஒரு நதியின் சிலிர்ப்புடன் இருக்கிறேன்
நீ ஒரு அதிசயத்தின் ஆனந்தம்
நான் கடலின் நடுவே
நீரின் சுகத்தை உணர்கிறேன்
இரவுகளில் நீ இல்லாத சமயங்களில்
நானில்லாது போகிறேன்
நீ நான் பிரிகின்ற காலத்தில்
இப்பிரபஞ்சத்தின் முழுமை தீர்ந்துவிடும்.

**************************

ஊதா நிறத்தில் பெய்கின்றது மழை
துளிகளை உள்வாங்கிய இந்த நகரம்
அடர்த்தியான ஊதாவாக மாறிக் கொண்டிருகிறது
பச்சையான மரங்களெல்லாம்
ஊதாவாய்ப் போய்விட்டன
மரத்திலிருந்து விழும் மழைத்துளிகளைப்
பிடித்து பார்க்கிறேன்
கைகளில் அதே வண்ணத்தில் ஒளிர்கின்றன
அந்த நிற மனிதனாய்
மாறியிருக்கிறேன் நானும்
என் மழை தேவதைகளிடம் ஒரு முறை
கேட்டுக் கொண்டிருந்தேன்
ஊதா பிடிக்குமென்று
ஆ¾லால் இந்த ஒரு நாளை
வண்ணமாய் மாற்றி தந்துவிட்டார்கள்
எனக்குப் பிடித்தவளும்
இந்த நிறத்¾¢ல் இன்று வாழ்ந்திருப்பாள்
நாளை வழக்கம்போலத்தான்
மழையிருக்கும்

**************************

என் மதுக்கிண்ணத்தில் நிறம் காட்டும்
மதுவிலிருந்து விரிகிறது உன் முகம்
நீ பேரழகியாய் உன் அகன்ற இதழ்களால்
என் இதயத்தில் எழுதுகிறாய்
உன் புன்னகையை
நான் வலிமையான பல மின்னல்கள்
தாக்கப்பட்டவனாய் உருக்குலைகிறேன்
இசையின் காதலியான நீ
எனக்குள் எளிதில் நுழைகிறாய்
அரூபமாய்
¿¡ý மிகுந்த பேரிசையில் மறைகிறேன்
´ரு இசை ஸ்வரமாய்
உன் வெளியெங்கும் மட்டுமே படர்கிறேன்
உன்னைத் தவிரவும் இவ்வுலகம்
வேறு எதைத் தந்துவிடப்போகிறது
தூங்கிகொண்டிருக்கும் உன் கனவில்
நான் ஒரு இசைக்கருவியாய்
உன் விரல்களிடையே வாழ்ந்து கொண்டிருப்பேன்
பகல் பொழுதில் உன் நினைவுகளுக்கிடையே
சிறு ஒரு துளி ஓசையாய்
ஒலித்துக் கொண்டிருப்பேன்
யாருமற்ற இந்த இரவில் தூங்காத நான்
என் இதயத்தில் உன்னைப் பார்த்துக்கொண்டிருìகிறேன்
இரவும் விழித்துக் கொண்டிருìகிறது
நமக்குத் துணையாய்.

**************************

உன் மௌனத்தின் பூட்டைத்திறக்கமுடியாமல்
தவிப்படைகிறேன் ஒரு மழை இரவில்
காத்திருந்து உன் குரல் ஒலிக்குப் பதிலாய்
மழையின் சப்தம் கேட்கிறேன்
அது என் ஏக்கத்தின் ஓயாத
மெல்லிய இசையாய் கொட்டுகிறது
இந்நகரெங்கும்
யாருமற்ற என் நதியில்
உன் படகு தென்பட்டிருப்பதைப் பார்த்து
மகிழ்வில் மூழ்கியிருக்கிறேன்
நீயோ ஏதோ ஒரு துன்பத்தின் தவிப்பில்
இருப்பாதாக உணர்கிறேன்
கடந்துவிட்ட உன் நாட்களில்
உன் இமைகளின் ஈரம் படிந்தேயிருந்ததை
அறியும் படியாய் இருந்தது என் மனம்
¿¡ன் உன் கூண்டில்
உனக்குப் பிடித்த பறவையாக மாறமுடியும்
என்று நம்புகிறேன்
ஆனாலும் என் எண்ணங்களெல்லாம்
என் நிரந்தரமற்ற கனவுகள்தான்
உன் பாடல்களில் எனக்கான சொற்களை
எழுதப்போவது உன் விரல்கள் மட்டுமே
நான் என் கரையின் ஓரம்
உனக்கான கவிதை வரிகளோடு
வாழ்ந்து கொண்டிருப்பேன்
என் இறுதி நாள் வரை.

- அய்யப்ப மாதவன்

சகமனிதர்களுக்கிடையே பரிமாறப்படவேண்டிய அன்பையும் அது தொடர்பான சந்தோஷங்கள் ,பிரச்º¢னைகள் மற்றும் இன்ன பிறவற்றையும் கவிதைகளாக மாற்றி விடுகிறார் அய்யப்ப மாதவன்

1988ல் வெளிவந்த 'தீயின் பிணம்' (ஹைக்கூ கவிதைத் தொகுப்பு) தான் அய்யப்ப மாதவனின் முதல் தொகுப்பு (அப்போது இதய கீதா என்ற புனைப்பெயர் வைத்திருந்தார்) தொடர்ச்சியாக அய்யப்ப மாதவனது 'மழைக்கு பிறகு மழை', நான் என்பது வேறு ஒருவன்' , 'நீர் வெளி', 'பிறகு ஒரு நாள் கோடை' ஆகிய கவிதை தொகுப்புகள் வெளிவந்திருகிறது.

பரிசோதனை முயற்சியாக' இன்று' என்ற காட்சியியல் கவிதையை (ஐந்து நிÁ¢டத்திற்கு ஓடக்கூடிய வீடியோ கவி¨¾) படைத்துள்ளார்.

தாயாராகி கொண்டிருக்கும் 'தண்டோரா' ,'ஜீவன்' ஆகிய தி¨Ãப்படங்களில் சில பாடல்களும் ±ழுதியுள்ளார்.

தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அன்பாதவன்
ஜே.கே.73


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...