அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திராவிட மொழிகள் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   10 , 2006  11:41:54 IST

இந்தியாவில் முதன் முறையாக 1881 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு கேள்வியாக மொழி இருந்தது. அதில் கிடைத்த விவரங்களில் இருந்துதான் மொழி பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

1886 - ஆம் ஆண்டில், ஜெனிவாவில் சர்வதேச மொழிகள் மாநாடு நடைபெற்றது. அதில் ஒவ்வொரு நாடும் தன் நாட்டில் பேசப்படும் மொழிகள் பற்றி ஆய்வை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. சர்.ஜார்ஜ் அபிரகாம் கியர்ஸன் அதற்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் 1894 - 1927 வரையில் இந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து நூல்கள் வெளியிட்டார். அவரின் தொடர்ச்சியான ஆய்வே இந்தியமொழிகள் பற்றி பலரும் பின்னால் ஆய்×கள் மேற்கொள்ள அடிப்படையாக அமைந்தது.

இந்தியா மொழி, கலாச்சாரம், சமயம், பழக்க வழக்கங்கள், உணவு, உடை - என்று பல்வேறு விதங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வித்தியாசப்பட்டு இருப்பதை கல்வெட்டுக்கள், தொல்பொருள் ஆய்வுகள் உறுதிபடுத்தின. அதாவது அவர்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் ஒன்றுமில்லை. ஒவ்வொரு இனமும் தன்னளவில் தனியானது என்பதை தீர்மானமாகச் சொல்லிக் கொண்டு வாழ்ந்து வந்தது என்பதையே அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரியவந்தது. அது கலை, இலக்கியம், மொழிகளில் மேலும் நிச்சியப்படுத்தப்பட்டன. மலைகளிலும், காடுப்பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் தங்களுக்கென தனியான மொழிகளையும், பழக்க வழக்கங்களையும், திருமணமுறைகள், சடங்குகள், ஆகியவற்றை கொண்டிருந்ததை அறிய முடிந்தது. அதில் நுட்பமான வேறுபாடுகள் இருந்தன. அந்த வேறுபாடுகள் அவர்களின் தனித்தன்மையாகும். வனத்தில் வசித்த மக்களிடையே பேச்சுமொழி இருந்தது. அதில் அவர்கள் பேசிக் கொண்டார்கள். பாட்டு இயற்றினார்கள். நாடகங்கள் போட்டார்கள். கதைகள் சொல்லிக் கொண்டார்கள். அதாவது வாய்மொழியாகவே தங்கள் கலாச்சாரத்தை நீண்ட மரபு கொண்டதாக வைத்து இருந்தார்கள்.

வட இந்தியாவில் முண்டா மொழிகள் - என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் மொழிகளை கிரியர்ஸன் கண்டுபிடித்தார். அவை வங்காளத்தையொட்டிய பகுதியில் சந்தாப் என பழங்குடிகள் பேசுவதாகும். முண்டா மொழி பழமையான மொழியாக இருந்தாலும் அதற்கு எழுத்துயில்லை. எழுத்து இல்லாதபடியில் எழுதப்பட்ட இலக்கியம் இல்லை. முண்டா வாய்மொழியாகவே ஜொலிòதுக்கொண்டு இருக்கிறது.

தென் இந்தியாவில் பழங்குடி மக்கள் - வனப் பகுதிகளில் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார்கள் மொழிக்கு எழுத்து இல்லை. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி மக்களான தோடர்கள், படுகர்கள் மொழிக்கு எழுத்து இல்லை.

உலகத்தின் ஆதிகுடிகள் என்று சொல்லப்படும் அந்தமான் பழங்குடி மக்கள் மொழிக்கும் எழுத்துகள் கிடையாது. எழுத்துக்கள் இல்லாத மொழியை மொழியியல் அறிஞர்கள் முக்கியமான மொழியாகத்தான் கருதுகிறார்கள். ஒர் மொழிக்கு எழுத்து இல்லை என்பதால் புறக்கணிக்கவேண்டிய மொழி அல்ல என்பது அவர்களின் கருத்தாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாய்மொழி ஒரு பொருளாக கணக்கெடுக்கப்பட்டது இந்தியமொழிகள் பற்றி ஆய்வுக்கு மட்டுமல்ல - இந்திய சரித்திரத்தில் அரசியல் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தியா பலமொழிகள் பேசப்படும் தேசம் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு மொழியும் முக்கியமானது என்பதை சுதந்திரப் போராட்டம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. மக்களுக்குமான ஆட்சி என்பது அவர்கள் மொழியிலான ஆட்சி என்பது அரசியல் தலைவர்களிடையே ஒரு கொள்கையாக இடம் பெற்றது. தேச சுதந்திரம் என்பதில் மொழிக்கு முக்கியமான இடம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார்கள்.

நாட்டில் தோன்றிய பத்திரிகைகள், புத்தகங்கள் மொழியை மக்களிடம் எடுத்துசென்றன. ராபர்ட் கார்டுவெல் திராவிட மொழி என்று ஒன்று உள்ளது. அது சமஸ்கிருதம் சார்ந்தது இல்லை. தனித்து இயங்கக்கூடியது என்று 1856-இல் எழுதினார். அவரின் கருத்து மொழியில் துறையில் நன்கு பதிந்துவிட்டது. மேலும் மேலும் பலர் திராவிட மொழிகள் பற்றி ஆய்வில் இறங்கினார்கள்.

திராவிடமொழிகளின் முதன் மொழி தமிழ். தெலுங்கு, கன்னடம், மலையாளம் பின்னால் வருகின்றன. இவ்நான்கு மொழிகளுக்கும் எழுத்து இருக்கிறது. எனவே எழுதப்பட்ட இலக்கியம் இருக்கிறது.

திராவிட மொழி குடும்பத்தில் மொத்தம் 26 மொழிகள் உள்ளன. துலு, படுகா, இருளா, முண்ட என பல உள்ளன. அவற்றுக்கு எழுத்து இல்லை.

உலகத்தில் திராவிட மொழிகள் பேசுகிறவர்கள் தொகை 200 மில்லியன்.
¾¢ராவிட மொழி பேசுகிறவர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகம். உலகத்தில் உள்ள மொழிக்குடும்பங்களில் திராவிடமொழிக் குடும்பம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதத்தின் திரிபு. திராவிடம் என்ற சொல் தமிழ், தமிழர்கள் என்பதைக் குறிப்பதாகவும் இருந்தது. அதனை மொழிக்குக் கொண்டு சென்றவர் ராபர்ட் கார்டுவெல்தான். பலுகிஸ்தானில் கூட திராவிடமொழி பேசப்படுகிறது. திராவிட மொழியான தமிழில் இருந்து பல சொற்கள் ஐரோப்பிய மொழிகளான கிரேக்கம், லத்தீன் ஹீப்ரூ மொழிகளுக்குச் சென்று உள்ளன. புகார், கொற்கை முசறி - என்னும் முன் துறைகளில் அதாவது துறைமுகத்தில் படகுகளில் பொருட்களை ஏற்றி சென்றவர்கள் வழியாக சொற்களும் சென்றன.

கிரேக்க மொழியில் - Ziggiber / Zigibers தமிழ்ச் சொல்லான இஞ்சிலேர் என்பதில் இருந்து வந்தது.

கிரேக்கத்தில் எழுதப்படும் Oryza - அதாவது rice - அரிசி என்ற தமிழ்ச்சொல். கி.மு.நான்காவது நூற்றாண்டில் சென்றது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர் எழுதியதை மேற்கோள்காட்டி ஜெர்மன் மொழியில் அறி»ர் ஹென்ரிச் வான் ஸ்டேன் எழுதிஉள்ளார்.

ர‰ய, மொழியியல் அறிஞர் நிகட்டா குரோவ் ரிக்வேகத்தில் என்பது திராவிட சொற்கள் இடம் பெற்று உள்ளன என்கிறார். வயல், விரல் - என்று சில சொற்களை எடுத்துக்காட்டுகிறார்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...


சா.கந்தசாமியின் இணையதளம் - Sakandasamy

Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20 ,Article 21 ,Article 22 ,Article 23 ,Article 24 ,Article 25,Article 26 ,Article 27,Article 28 ,Article 29,Article 30,Article 31,Article 32,...


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...