அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மொழிபெயர்ப்பு - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  03:42:57 IST

மொழிபெயர்ப்பு என்பது அசல் எழுத்துக்கு செய்யப்படும் துரோகம் என்றார் ஒரு எழுத்தாளர்.அவரும் மொழிபெயர்ப்பாளர்தான். முதல்தர எழுத்தாளர்கள் மொழிபெயர்க்கிறார்கள். மூன்றாம் தர எழுத்தாளர்கள் தழுவி எழுதுகிÈ¡ர்கள் என்பது பல ஆண்டுகளாகத் தமிழில் இருந்து வருவது.

இலக்கியச் சண்டை என்று வரும் போதேல்லாம் தழுவல் வந்து விடும்.புதுமைபித்தன் தழுவல் ஆசாமி என்று கல்கியோடு பெரிய யுத்தமே நடத்தினார்.ஆனால் தழுவல், மொழிபெயர்ப்பு என்பது ஒவ்வொருமொழியிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது.

இலக்கியம் படிக்க இன்னொரு மொழியைப் படிக்க முடியாது.தனக்குத் தெரிந்த மொழியில் கிடைக்கும் புத்தகத்தைத்தான் படிக்க வேண்டும்.அதை மொழிபெயர்ப்புதான் சாத்தியமாக்குகிறது.

மொழிபெயர்ப்பில் பலநேரங்களில் மூலத்தில் உள்ள உயிர் போய்விடுகிறது.சொற்கள் கூட்டம் இருக்கிறது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது.ஆனாலும் மொழியே இலக்கியம் இல்லை.மொழியில்தான் இலக்கியம் படைக்கப்படுகிÈது என்றாலும் நேராகச் சொல்லாமல் விட்ட சொற்களின் வழியாக இலக்கியத்தைப் புரிந்து அனுபவிக்க முடிகிறது என்கிÈபோது - மொழிபெயர்ப்பு எத்தனைதான் மோசமானதாக இருந்தாலும் - மூலத்தை ஓரÇவு புரிந்து கொள்ளமுடிகிறது.

மைசூரில் தென்மொழிகள் கற்பிக்கும் கல்லூரி முதல்வர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, மலையாள இலக்கிய வரலாறு பற்றி பேச்சு வந்தது.சாகித்ய அகதமி வெளியிட்டிருக்கும் புத்தகம் அப்படியொன்றும் தரமானதாக இல்லையே என்றேன். அதற்கு அவர் உங்களுக்கு ம¨Äயாள மொழி தெரியாது.ம¨Äயாள இலக்கிய வரலாறு தெரியாது .அப்படி இருக்கையில் இந்த முடிவிற்கு எப்படி வந்தீர்கள் என்று கேட்டார்.

எனக்கு அப்படியொரு அபிப்ராயத்தை அந்த புத்தகமே கொடுத்தது என்றேன்.

மொழிபெயர்ப்பில் முதலில் தொலைந்துபோவது அதன் மொழி. மொழிநடை. எனவேதான் மொழியை முக்கியமாகக் கொண்ட வட்டாரப் படைப்புகள் மொழிபெயர்ப்பில் வருவதில்லை.அதற்கு இணையான எந்தச் சொல்லைப் போட்டாலும் அர்த்தம் கிடையாது.ஏனெனில் ஒரு சொல்லுக்கு ஒரு அர்த்தம் என்பது இல்லை.அது இடத்துக்கு ஏற்ப - சொல்லும் முறைக்கு ஏற்ப ஒரு தொணியைப் பெற்றுவிடுகிறது.அந்தத்தொணி செத்துப்போனால் சொல் அர்த்தமிழந்து போய்விடுகிறது.

மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் முதலில் காவு கொடுக்கப்படுவது எழுத்தாளனின் மொழிதான். அது இன்னொரு மொழிக்குப் போகிறபோது - இன்னொரு வாகனத்தில் ஏறிப் போகிறது.அது சரியான வாகனமாக இருக்க வேண்டும்

தமிழ்நாட்டில் பிறமொழி கற்க வசதி அப்படியொன்றும் பெரிதாக இல்லை.இலக்கிய மொழிபெயர்ப்பு லாபகரமானதும் இல்லை.தங்களின் சொந்த ஆசை,ஆர்வத்தின் வழியாகவே மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது.அதை சரிபார்க்க ஆட்கள் கிடையாது.எனவே நி¨È கு¨Èயெல்லாம் இருக்கவே செய்யும்.மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை படைப்பில் உள்ள சக்தி - கருத்து வெற்றி கொண்டுவிடுவதும் உண்டு.

இந்தியாவில் யாருடைய ஆதரவும் பரிசும் இல்லாமல் எல்லோர்க்கும் பிடித்தமான எழுத்தாளர் சரத் சந்திரர்தான்.. அவரைத் தமிழர்கள் படிக்கிÈ¡ர்கள்.அதுவும் தங்களின் மொழியில் மொழிபெயர்த்¾து.

1715 ஆண்டில் புதிய ஏற்பாடு - என்று பைபிளை சீகன் பாகு தரங்கம் பாடியில் அரங்கேற்றினார்.அது பற்றி இன்னொரு பாரதியான வீரமாமுனிவர் எள்ளி நகையாடி , மோசமான மொழிபெயர்ப்புக்கு சீகன்பாகு மொழிபெயர்ப்பை உதாரணம் காட்டினார்.

மொழிபெயர்ப்பாளர்கள் , தங்கள் மீது சொல்லப்படும் குற்றம் குறை எதையும் பொருட்படுத்துவது இல்லை. தங்களின் சொந்த விருப்பத்தின்படி மொழிபெயர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். அதன் காரணமாகவே மொழிபெயர்ப்பு நூல்கள் ஒவ்வொரு மொழியிலும் பெருகி வருகிறது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20 ,Article 21 ,Article 22 ,Article 23 ,Article 24 ,Article 25


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...