அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நேர்காணல் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  03:48:58 IST

பேட்டி, நேர்காணல், இன்டர்வ்யூ எல்லாம் ஒன்றுதான்.ஆனால் ஒன்று போல் இருப்பதில்லை.எத்தனை தினுசான எழுத்தாளர் உண்டோ அத்தனை விதமான நேர்காணல் உண்டு.ஒரே எழுத்தாளரும் எப்போதும் ஒரே மாதிரியாக பதில் சொல்வதில்லை.நேரத்திற்கு ஏற்ப , சூழ்நிலகளுக்கு ஏற்ப - கேள்வி கேட்க வந்திருப்பவரின் கேள்விகளைப் பொறுத்து பதிலின் தரம் மாறிவிடுகிறது.

ஐம்பது ஆண்டுகளின் வளர்ச்சிதான் நேர்காணல். அதற்கு முன்னால் எழுத்தாளர்கள் பேட்டி கொடுத்தது இல்லை.பத்திரிகைகள் பேட்டி கேட்டது இல்லை.அதாவது பேட்டி என்ற ஒன்று இருக்கிறது என்பதே இல்லை.

பாரிஸ் ரீவ்யூ - என்ற ஆங்கில பத்திரிகை பிரபலமான எழுத்தாளர்கள்- நோபல் பரிசு பெற்றவர்கள் தீவிரமாக இலக்கியத்தில் இயங்கக் கூடியவர்களென்று சிலரை தேர்ந்தெடுத்து பேட்டி கண்டு கட்டுரைகளாக் வெளியிட்டது.அதன் வழியாக பத்திரிகை பிரபலம் அடைந்ததா என்பது தெரியவில்லை.ஆனால் புத்தகம் வெளிவந்தவுடன் புகழ்பெற்றுவிட்டது.

எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் என்று எல்லோரும் படித்தார்கள்.அந்தப் படிப்பு இரண்டு அம்சங்களை சொல்லிகொடுத்தது.முதல் அம்சம் இலக்கிய எழுத்தின் உள்ளே இருக்கக் கூடியது.அதை வெளிப்படுத்த எழுத்தாளன் செய்யும் காரியங்கள். அது எழுத்தில் வெளிப்படையாக இல்லை. ஆனால் அது முக்கியமானது.தெரிந்து கொள்ளக்கூடியது.

இலக்கியத்தில் எழுதப்படுகிÈ இலக்கியந்தான் முக்கியம். அதற்கு அப்பால் இருப்பதெல்லாம் அவசியமில்லை என்று பல ஆண்டுகளாக நிலைபெற்றிருந்த எண்ணத்தை அது உடைத்தது.அதனை நேர்காணல் நேரடியாகச் சொல்லவில்லை.ஆனால் அதன் விளைவாகவே அது இருந்தது.நேர்காணல் வழியாக ஏற்பட்ட இலக்கிய லாபம் என்றே அதை குறிப்பிடவேண்டும் அதன் எல்லையும் பரப்பும் கூடியபோது ஒதுங்கி இருந்த எழுத்தாளர்கள் - என் படைப்புதான் வாசகர்களுக்கு தேவையானதே தவிர - அதை அடைந்த வழி இல்லை என்று சொல்லி ஒதுங்கி இருந்தவர்கள் எல்லாம் பேட்டி கொடுக்க முன்வந்தார்கள்.

பேட்டியில் சிக்கிக் கொள்ளாத ஆளே இல்லை.அதாவது எதிராÇ¢யை சிக்க வைத்தவர்களும் உண்டு; அதில் சிக்கிக் கொண்டவர்களும் உண்டு.

நேர்காணலை ஒவ்வொரு மொழியினரும்- குறிப்பாக சிறுபத்திரிகைகள் முக்கியமான அம்சமாகக் கொண்டன.ஏனெனில் எழுத்து என்பது எழுத்தாளனின் கருத்துகளின் அடிப்படையில் உருவாகிறது என்று அவை நம்பின.அதற்கு ஏற்ற மாதிரி எழுத்தாளர்களையும் , பேட்டியாளர்களையும் தேர்வு செய்தன.

பலநேரங்களில் பேட்டி மகத்தான தோல்வியாக முடிந்ததும் உண்டு.ஏனெனில் கவசம் போட்டுக் கொள்கிற எழுத்தாளர்- விஷயம் தெரியாத கேள்வியாளர் என்று சேர்கிறபோது பேட்டி தோல்வி அடைவது தவிர்க்க முடியாததுதான்.

எழுத்தாளர் எழுத ஆரம்பித்ததில் இருந்து ஒரு கொள்கை- ஈடுபாடு - சித்தாந்தத்தோடுதான் எழுதுகிறார்.அதை பூரணமாகச் சொல்லமுடியாவிட்டாலும் - அதைத் தெரிந்து கொண்டு கேðக ஆள் தேவைப்படுகிறார்.அப்படிப்பட்ட ஆளைக் கண்டுபிடிப்பது சிரமமாகப் போகிறபோது தோல்விதான்.

பலநேரங்களில் எழுத்தாளர்கள் தோல்வியை எழுத்தின் வெற்றியாக மாற்றிவிடுவது உண்டு.ஏனெனில் அவர்களுக்கு பேட்டிக்கு ஆளே தேவையில்லை.தன்னிடம் இருப்பதை, இருப்பதாக நம்புவதை சொல்லிவிடுகிறார். இதனை தொலைக் காட்º¢ பேட்டிகளில் அதிகமாகக் காண முடிகிறது.

சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேட்டியாÇரை நம்புவதேயில்லை.எதையும் எழுதிக் கொடுத்து விடுவார்கள்.பதிலைத்தான் என்பது இல்லை. கேள்விகளையும் கூட.அது சமூகத்தின் நிலைப்பாட்டால் நடப்பது. மகிழ்ச்சிகரமானது இல்லை.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20 ,Article 21 ,Article 22 ,Article 23 ,Article 24


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...