அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?'- சித்ரவதையை அனுபவிக்கும் கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   03 , 2012  04:34:44 IST

மனைவி துன்புறுத்துவதை காரணம் காட்டி விவாகரத்து பெறுவதற்கு கணவனுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவமுள்ள தீர்ப்பை அளித்துள்ளது.

2000-ம் ஆண்டு சென்னை மகாலிங்கபுரம் திருமண மண்டபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகள் ஹேமலதாவிற்கும், கே.ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு வேளச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்த இருவரிடையே பிரச்சனை ஏற்பட ரமேஷை வரதட்சணை வழக்கில் சிறைக்கு அனுப்பினார் மனைவி ஹேமா.

இதனால் மனமுடைந்து ரமேஷ் விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மகளிர் நீதிமன்றம் அதே நேரத்தில் ரமேஷ் மீதான வரதட்சணை கொடுமை வழக்கை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து தாம் கோரியிருந்த விவகாரத்து மனுவை குடும்ப நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.

மேல்முறையீட்டில், 'ஹேமலதா பிடிவாத குணம் கொண்டவர். தான் நினைப்பதை செய்து முடிக்கும் குணம் அவரிடம் உள்ளது. எனது குடும்பத்தாரை விட்டு பிரிய வேண்டும் என்றும், தனியாக வாழ வேண்டும் என்றும் என்னை வற்புறுத்தினார். இல்லாவிட்டால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். `நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?' என்றெல்லாம் திட்டினார். இறுதியில் என் மீது போலீசில் பொய்ப்புகார் கொடுத்துவிட்டார். எனவே இனிமேலும் ஹேமலதாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எனவே எங்கள் திருமணத்தை செல்லாது என்று அறிவித்துவிட்டு, குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு ஹேமலதா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், என்னை ரமேஷ் அடித்து துன்புறுத்தினார். இதற்காக 2 முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறேன். அவரைவிட்டு நான் பிரிந்து செல்லவில்லை. அரசியல் செல்வாக்கை குடும்பத்தில் பயன்படுத்தினேன் என்று என்னைப் பற்றி அவர் சொல்வதில் உண்மை இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.பின்னர் அவ்ர்கள் அளித்த தீர்ப்பில்

"மனைவி கொடுமை செய்ததாக கூறிய குற்றச்சாட்டை ரமேஷ் நிரூபிக்கவில்லை என்று கூறி அவரது மனுவை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் எங்கள் முன்பு வைக்கப்படும் கேள்விகள் இரண்டுதான். மனைவி கொடுமை செய்தார் என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து விவாகரத்து பெற கணவருக்கு உரிமை உள்ளதா? அதே சூழ்நிலையில், மனைவி தனது கணவனுடன் இணைந்து வாழ்வதை ஏற்க முடியுமா? என்பவைதான்.
கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஹேமலதா கூறுகிறார். ஆனால் குடும்பநல நீதிமன்றத்தில் அவர் விவாகரத்து கேட்கவில்லை. தன்னை மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி கணவன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான், கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமையைக் கேட்டு ஹேமலதா மனு தாக்கல் செய்திருக்கிறார். கணவன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசில் ஹேமலதா புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவர் ஜாமீன் பெறுவதையும் ஹேமலதா எதிர்த்து இருக்கிறார். மனைவியின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது, ரமேஷ்தான் மனைவியிடம் இருந்து கொடுமைகளை அனுபவித்திருப்பது தெரிகிறது. கணவன் மீது கூறிய கிரிமினல் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை.

இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு, கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமையை கேட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? அன்பெல்லாம் அகன்ற பிறகு, 2 பேரும் எப்படி சேர்ந்து வாழ முடியும்? எனவே சேர்ந்து வாழும் உரிமையை இங்கு அவர் கோர முடியாது. அதுதொடர்பான ஹேமலதாவின் மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது தவறு. அதோடு மனைவியிடம் இருந்து கொடுமைகளை அனுபவித்த கணவன் ரமேஷ், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு உரிமை உள்ளது. இதனடிப்படையில் 2 பேரின் திருமணம் செல்லாது என்று அறிவிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...