அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தொடர் கதைகள் செத்துவிட்டன - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  08:36:12 IST

தொடர்கதைகள் செத்துவிட்டன. அதாவது ஒரு காலத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் பிரதான இடம்பெற்றிருந்த சரித்திர, சமூக தொடர்கதைகள் அடியோடு செத்துவிட்டன. அவற்றைப் புதை குழியில்-எரித்த சாம்பலில் இருந்து- ஆன்மீகத் தொடர்களும் சுயமுன்னேற்ற கட்டுரைகளும் புத்துயிர் பெற்றிருக்கின்றன.

அது கல்லூரிகளில் இலக்கியம் கற்றுக்கொடுக்கப்பட்டதின் விளைவு. இலக்கியம் என்பது புகழ் உரைகளின் தொகுப்பு இல்லை. எடுத்துக்காட்டு இல்லை. தொன்மையான படைப்பு இலக்கியம் கொண்ட தமிழ் மொழிக்கு நூறு ஆண்டுகளில் நேர்ந்து இருக்கிற அவலங்களில் ஒன்று.

நாவலும்- தொடர் கதையும் ஒன்று போல் இருந்தாலும் ஒன்றில்லை என்பதைத் தமிழ் பத்திரிகைகள் தெளிவுபடுத்திவிட்டு இருக்கின்றன. எனவேதான் தாங்களே ஸ்தாபித்த தொடர் கதைகளைக் கொன்றுவிட்டன.

தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் தொடர் கதை என்பது முக்கியமான அம்சமாக இருந்தது. தொடர் கதை எழுதும் ஆசிரியருக்காக விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டது. ஒரு பத்திரிகையில் ஒரு தொடரை முடித்தவரை இன்னொரு பத்திரிகை கொத்திக் கொண்டு சென்றது. தொடர்கதை எழுதும் எழுத்தாளரே தமிழ்நாட்டின் எழுத்தாளராக இருந்தார். தொடர் கதைகளாக வந்த கதைகள் உடனடியாக புத்தகங்களாக வெளிவந்தன. அவற்றுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டன. பாராட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன.

தொடர் கதை தமிழ் மக்களின் கலாச்சார வாழ்க்கையின் ஓர் அம்சமாக இருந்தது. அதை ஏற்படுத்தி வைத்தவர் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி.அவர் கல்கி பத்திரிகையில் எழுதிய தொடர்கதைகளான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை ஆகிய தொடர்கள் தமிழ்த் தொடர்கதை வரலாற்றில் முக்கியமானவையாகும்.அதிலும் பொன்னியின் செல்வன் ஓர் உச்சம். ஐந்தாறு முறைகள் திரும்பத் திரும்ப அது தொடராக வெளிவந்தது.

தமிழ் மக்கள் ஆவலோடு காத்திருந்து படித்த தொடர் அது. அதற்கு சரித்திரம் மட்டும் காரணம் இல்லை. கல்கியின் நடையும், சுவராசியமான சம்பவங்களும், வாராந்தோறும் தொக்கி இருந்த மர்ம புதிரும்- மக்களைக் காத்திருக்கவும் படிக்கவும் வைத்தது.

தமிழ் மக்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மகத்தான சாம்ராஜ்யத்தை நிறுவிய ராஜராஜ சோழன் வழிவந்தவர்களாக நினைக்க வைத்தது.

எனவே தமிழ்ப் பத்திரிகை என்றால்- அதுவும் வார இதழ் என்றால் தொடர் கதை தவிர்க்க முடியாத ஒன்று. சில பத்திரிகைகள் சமூகம், சரித்திரம் என இரண்டு தொடர்கதைகளை ஒரே நேரத்தில் வெளியிட்டன. ஆனால் இலக்கிய விமர்சகர்கள் தொடர் கதைகளை இலக்கியமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய எளிய தன்மை, பரபரப்பான சம்பவங்கள், சாமார்த்தியமான உரையாடல், திடீர் திருப்பம் எல்லாம் சேர்ந்து கொண்டு தொடர் கதையை கீழே கொண்டு போய்விடுகின்றன.

நாவல் வேறு; தொடர் கதை வேறு. முக்கியமாக இரண்டும் ஒன்று இல்லை என்று க.நா.சுப்பிரமணியம் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் கருத்துகளுக்கு எதிராக- இலட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் எங்கள் தொடர் கதைகள் இலக்கியம் இல்லை என்றால் என்னதான் இலக்கியம் என்று கேட்டார்கள். ஆனால் சிறு பத்திரிகைகள், இலக்கியத்தில் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்களுக்கு க.நா.சுப்பிரமணியம் சொல்வது சரியெனப்பட்டது. அவர்கள் தொடர் கதைகளில் உள்ள பலவீனங்களை எளிதாகவே அறிந்து கொண்டார்கள்.

தொடர்கதை பத்திரிகை விற்பனையை அதிகரிக்கவும், விற்பனை சரிந்துவிட்டால் காக்கவும் ஓர் வழியாக இருந்தது.

இந்தியாவில் கதைகளை ஒவ்வொரு மொழி பத்திரிகையும் ஒவ்வொருவிதமாக வெளியிடுகின்றன. அவை தொடர்தான். ஆனால் அவை பத்திரிகைக்காக எழுதப்படுபவை இல்லை.

வங்க மொழியில் தொடர் கதைகள்-ஏற்கனவே எழுதப்பட்டு இலக்கிய ஆசிரியர்கள், விமர்சகர்களின் அங்கீகாரம் பெற்ற நாவல்கள் தொடராக வெளியாகின்றன. அதாவது தகுதியானது, தரமானது என பாராட்டப்பட்டவை பத்திரிகைகளின் வாயிலாக பெரும்பான்மையான மக்களைச் சென்றடைகின்றன.

நான், 1990ஆம் ஆண்டில் சாகித்திய அகா¾மி பரிசு பெறுவதற்காக டில்லி சென்று இருந்தேன். அப்பொழுது இந்தி பத்திரிகை ஒன்றுக்காக நிருபர் நேர்காணல் கண்டார். அப்பொழுது ஒரு கேûவிìகு என் நாவல்கள் அனைத்தும் நேராக புத்தகமாக வெளிவந்தவை. தொடராக பத்திரிகையில் வந்தது இல்லை என்றேன். அதற்கு ஒரு நிருபர் இந்தி மொழியில் தொடர் கதை கிடையாது. நாவல்கள் தான் பின்னர் தொடராக வெளிவருகின்றன என்றார்.

கல்கிக்குப் பிறகு சரித்திரம், காமம் இவற்றின் கலவையாக சாண்டில்யன் நிறைய எழுதி ஏராளமான வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்தார். பின்னர் அறவொழுக்கம், இலட்சியம் இவற்றின் பிரதிநிதியாக கதாபாத்திரங்களை தமிழ் மக்களின் அன்புக்கு உரியவராக்கினார் நா. பார்த்தசாரதி.

இலட்சியம், தர்க்கம், யதார்த்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கதைகளை ஜெயகாந்தன் எழுதினார். தன்காலத்தில் அவர் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுகு எதிராக எழுதினார். அதுவே அவரை படிக்கவும் விவாதிக்கவும் உரியவராக்கியது. தமிழ் மக்களுக்கு உரிய அபிமான எழுத்தாளராக இருந்தார்.

வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் மாறியது போலவே பத்திரிகைகளும் மாறின. தொடர் கதையின் போக்குகள் வேறு தளத்தில் சென்றன. துப்பறியும் கதைகளாகவும், கொலைக்களவு கதைகளாகவும் தொடர்கள் புதிய அவதாரம் எடுத்தன.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் தமிழ்ப் பத்திரிìகைகளில் தொடர் கதைகள் தொலைந்து போய்விட்டன.

தொடர் கதைகளின் இடத்தில் ஆன்மீகக் கட்டுரைகள், கோவில் யாத்திரிகைகள், சுய முன்னேற்றக் கட்டுரைகள் இடம் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. அடிப்படையில் தொடர் கதைகளுக்கும் ஆன்மீகக் கட்டுரைகளுக்கும் அதிகமான வித்தியாசம் இல்லை.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...