அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முல்லை பெரியாறு சில தகவல்கள்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   16 , 2011  09:09:25 IST

முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்,இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது, 1500ம் வருடங்களில் மதுரை நாடு என்று அழைக்கபட்ட இடம் மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் , தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கிய ஒரு பகுதி . 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்திலும் சரி, பின் நடந்த ஆட்சிகாலத்திலும் சரி , திருமலை நாயக்கர் முதல் ராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு முறையும் திருவாங்கூர் ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர் , பின்னர் போரில் தோல்வியுற்று வரி செலுத்துவது அவர்கள் வழக்கம். 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் நாள் மதுரை மாவட்டம் உதயமானது , 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லை பெரியாறு நதிகளை இணைத்து அணை போட்டு நீரை மதுரை , இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார் , இதற்காக அவர் ஏற்படுத்திய குழு மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று காடுகளை அழித்து அணை கட்ட இடம் தேர்வு செய்து மதிப்பீடு செய்தனர் . போதிய நிதி வசதி இல்லாமல் அணை கட்ட இயலவில்லை . பின்னர் 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஜ் பேரிஸ் இந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய பொறியாளர் ஜேம்ஸ் கார்டு வெல்லிடம் உத்தரவிட அவரோ இது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என்று அறிக்கை அளித்தார், பின்னர் பலரின் முயற்சிகள் தோல்வி கண்டது , ஒரு வழியாக அன்றைய ஆங்கில அரசு அந்த இடத்தில் அணை கட்ட திட்டமிட்டது. அந்த சமயத்தில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கபட்டதால் அணை கட்டும் திட்டம் காலதாமதமானது.

1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின, ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது, பின்னர் ஆங்கிலேய அரசு இந்த அணை கட்டும் திட்டத்திற்கு பணம் ஒதுக்க மறுத்துவிட்டது, பின்னர் கர்னல் பென்னி குக் அவரது முயற்சியில் இந்த அணையை கட்டி முடித்தார் ,இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது, சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது ,இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.

அணை கட்டும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால் நான்கு வருட பேச்சு வார்த்தை நடத்தபட்டு பின்னர் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி திருவாங்கூர் சமஸ்தானம் என்று அழைக்கபட்ட கேரளாவுக்கும் , சென்னை மாகாணம் என்று அழைக்கபட்ட தமிழ்நாட்டிற்கும் அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.

பின்னர் 1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகம் அணையை வலுப்படுத்திய போதும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை, காரணமாக கேரள அரசு சொல்வது சுண்ணாம்பினால் கட்டபட்ட அணை உடைந்து விடும் , இதனால் 35 லட்சத்திற்கும் அதிமான மக்கள் இறந்துவிடுவார்கள் என்பது. ஆனால் அவர்கள் சொல்வது போல் முல்லை பெரியாறு அணை இடிந்து போனால் அங்குள்ள நீர் மலைப்பகுதிகள் வழியாக சென்றடையும் இடம் கீழே உள்ள இடுக்கி அணையில் தான். முல்லை பெரியாறு அணையை விட இடுக்கி அணை ஏழு மடங்கு பெரியது. இதன் மொத்த கொள்ளளவு 70 டி.எம்.சி ஆகும். இந்த இரு அணைகளுக்கும் இடையில் எந்த விதமான மக்கள் வாழ்விடங்களும் இல்லை. மேலும் 1979 ல் நடந்த பிரச்சனையில் அணை பலவிதங்களில் பலப்படுத்தபட்டது, கேரள அரசாங்கம் சொல்வது போல் அணை வெறும் சுண்ணாம்பு கட்டிடம் அல்ல. சுமார் 600 டன் சிமெண்ட் அதனுள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வெளிப்புறங்கள் ஒரு கவசம் போல் உருவாக்கபட்டுள்ளது. கிட்டதட்ட அது ஒரு கான்கிரிட் அணை என்று சொல்வதுதான் உண்மை. இந்த அணையால் பயனடையும் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலப்பாசனம் மற்றும் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த முல்லை பெரியாறு.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...