அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொலவெறியின் பாப்புலாரிட்டி?

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   03 , 2011  13:38:25 IST

ஃபேஸ்புக்கில் நண்பர் கொலவெறி இணைப்பு கொடுத்திருந்தார். முதலில் இன்னொரு தமிழ் “குத்து” பாட்டு என்று கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து என் வட இந்திய நண்பர், பாடலின் வரிகளை அனுப்பியிருந்தார்.அரசாங்க வேலை பார்க்கும் ஓர் நடுத்தர வயது உயர் அதிகாரி அவர். “நல்லா தானே இருந்தார்” என்று வருத்தப்பட்டேன். பத்து வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் முஹம்மத் ரபியின் பாடலை பாடி எங்களை அசத்தியவர் அவர். எதாவது நடுத்தர வயது கண்டத்தில் இருக்கிறாரோ என்று அவரையும் அவர் குடும்பத்தையும் நினைத்துக்கவலைப்பட்டேன்.
அன்று சாயந்தரம், மெட்ரோவில் (டெல்லியில்) வீட்டுக்குத் திரும்பும் போது மூன்று விடலை பையன்கள் (டீன் ஏஜ்...) கொலவெறி க்யா ஹே? என்று விவாதித்து கொண்டிருந்தார்கள். அது என்ன “டி”? என்ற சந்தேகம் வேறு. ஆனால் சில நிமிடங்களில் ஒருமித்தமாக பாட்டு “படியா” (அருமை) என்று முடிவுக்கு வந்து விட்டார்கள். இன்னொரு விடலை பெண் இவர்கள் பேசுவதை முகத்தில் சந்தோஷத்துடன் கவனித்து கொண்டிருந்தாள்.
அதற்கடுத்த மூன்று நாளும் டெல்லிTimes of India வில் இந்த செய்தி தான்.Mint பத்திரிகையில் பாடல் பாபுலர் ஆனதற்கு அறிவுஜீவி விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் அணுகும் போது எழும் வியப்பு பாட்டை வெற்றி அடையச் செய்து விட்டதாக.
பாட்டை கேட்டேன். நல்லா தான் இருந்தது. ஆனால் வடநாட்டு மக்களுக்கு ஏன் இந்த பாட்டு இவ்வளவு பிடித்து விட்டது? என்று தெரியவில்லை. எனக்கு எப்போதும் கேட்கும் தமிழ் “குத்து” பாட்டு போல தான் இருந்தது. உங்களுக்கும் அப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (நீங்கள் ஒரு நடுத்தர வயது தமிழ்க்காரர் என்ற ஊகத்தில் இதை சொல்கிறேன்).
தமிழுக்கு கிடைத்த இந்த வரவேற்பை கண்டு ஆனந்தப்படுவதா? தெரியவில்லை.அதில் எங்கே தமிழ் இருக்கு? கொலவெறி,மாமாவை தவிர. இன்னும் கொஞ்ச நாளில் கண்கள் பனிக்க,தொண்டை கமர தமிழனின் பெருமையை தரணி எங்கும் கொண்டு சென்ற இந்தப் பாடலுக்கான விருதை சில பேர் பெற்றுக் கொண்டிருப்பார்கள். டிவியில் பார்க்கலாம்.விருது பெறுவதில் ஆட்சேபனையில்லை. அந்த பனிக்கும் கண்களில் இழையோடி விடக் கூடிய பெருமை தான் கவலை தருவதாக உள்ளது.
காரணம்: இதெல்லாம் கடைசியில் ஒரு stereotype ஆகி விடும். நாளைக்கு தமிழ் நாட்டு ஆட்கள் டெல்லி வந்தால் யாராவது கேலி என்றே தெரியாமல்“கொலவெறிடி” என்பார்கள்.பின்பு “மாமா” என்பார்கள்.நாம் இங்கிலிஷில்வழி கேட்டால் பதிலுக்கு whatu என்பார்கள். நமக்குகொலைவெறி உண்மையிலே வந்து விடும்.
வடஇந்தியாவில்பல விளம்பரங்களில் தமிழன் என்றால்…அவன் பட்டையை போட்டு இருப்பான். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அயோ என்பான் (ஹிந்தியில் ஐயோவை அயோ ஆக்கி விடுவார்கள்), தயிர் சாதம் சாப்பிடுவான், சாம்பார் குடிப்பான். இதே தமிழில் வட இந்தியர் என்றால் “நிம்பல்கி,அச்சா”.சர்தார்ஜி என்றால் முட்டாள். குஷ்வந்த் சிங் தான்இதை தொடங்கி வைத்தார்.
இப்படி தான் ஹிந்தி தெரியாத தமிழ் நண்பர் ஒருவர் பத்து வருடங்களுக்கு முன், தன்னுடன் வேலை பார்த்து கொண்டிருந்த வட இந்தியப் பெண்ணிடம் “சோலி கே பீச்சே க்யா ஹேய்” என்று பாடினார். அவர் கேட்ட, ரசித்த பிரபலமான ஹிந்தி பாடல் அது. அவருக்கு தெரிந்த ஹிந்தி அவ்வளவே. சமீபத்தில் அவர் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டார் ( தண்ணியில்லா காடு… சோளி என்ன? உள்ளாடையை கூட துவைக்க தண்ணி இருக்காது...). அவர் அதற்கு பல்வேறான தர்க்க ரீதியிலான காரணங்களை சொல்லி கொண்டிருக்கிறார். எனக்கென்னவோ தலைமையகத்தில் HRல் வேலை பார்க்கும் அந்தப் பெண்ணும், இந்தப் பாட்டும் தான் என நினைக்கிறேன்.பாட்டை நாம்மறந்து விடலாம். சில பேர் மறக்க மாட்டார்கள்.
இன்னொரு எதிர்வினை. கோவாவில் வேலை செய்த போது என் டிரைவரிடம் பனாஜிபஸ் ஸ்டாண்டில் நம் புகழ் பெற்ற தமிழ் வார இதழ்களை, வரும் வழியில், வாங்கி வரச் சொன்னேன். மலையாள புத்தகங்கள் கூடச்சேர்த்து தமிழ் புத்தகங்களையும் ஒருவர் விற்பார். அடுத்த முறை என் டிரைவரிடம் சொல்ல அவர் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம். அப்புறம் தான் தெரிந்தது. அவர் அந்த இதழின்“கவர்ச்சி”படங்களை பார்த்து நான் வாங்கும் பத்திரிகையை “மோசமாக” நினைத்து விட்டார் என்று. என்னை நினைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் பல வருடங்களாக படித்த அந்த தமிழ்ப்பத்திரிக்கையை அப்படி அவர் நினைக்கும் படி ஆகி விட்டதே என்று நிறைய வருத்தம். இப்போதெல்லாம் இதழ்களை வாங்கும் போது அந்த டிரைவர் தான் ஞாபகத்தில் வருவார்.அப்போதுசொல்ல முடியாத வேதனை.அந்த பத்திரிகையின் மீது.
பாப்புலாரிட்டி மட்டுமே சில சமயம் நமக்கு மரியாதையை தருவது இல்லை.
கொலவெறியின் பயன் தான் என்ன? முதலில் இதை பற்றி வட நாட்டில் யாராவது சொன்னால் நமக்கு சற்று கோபம் வரும். அப்புறம் உறைக்காது. நம்மை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்து கொள்ளாமல் இருக்க உதவும். சிரித்து ஏற்று கொண்டு விடுவோம். நல்லது தான். சர்தார்ஜிகள் இப்போது அப்படி தான் எடுத்து கொள்கிறார்கள். அயோவிற்கு கொலவெறி கொஞ்சம் மாற்றம் தான். பயம் போய் கொலைவெறியோடு வடநாட்டில் இனி அலையப் போகிறோம்.
அதற்காக பெருமைப்படலாம்.

- ஜி.நடராஜன்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...