அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கலை வடிவத்தில் The Idea of justice? ஜெயமோகனின் அறம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   27 , 2011  00:25:18 IST

தர்க்கங்களையும், அறிவியலையும் சார்ந்த அறிவார்ந்த ஒழுங்கில் தான் இன்று ஓரளவு வாழ்க்கை நகர்கிறது என்று நினைத்த என்னை அயரச் செய்து விட்டது இந்த கதைகள்.

யாராவது நமக்கு நல்லது செய்தால் கூட இன்று நமக்குள் எழுகிறது சந்தேகம். அதுவும் சமுகத்தை சார்ந்த நீதி, நியாயம்* பற்றிய கேள்வி எழும் போது இந்த சந்தேகங்கள் அரசாங்கத்தையும், அரசியல்வாதியையும் அதை சார்ந்த மற்றவர்களையும் திட்டுவதில் முடிந்து விடுகிறது.

இதை கடந்து தனி மனிதனின் அறம் சார்ந்த நிலைப்பாட்டை புரிந்து கொள்வது கடினம். தன்னுடைய மகனிடம் அன்புச் செலுத்தும் ஒருவர், அலுவலக வேலையில் அநிதியை இழைத்து விடலாம். இதற்கு எதிர்மாறாக அலுவலகத்தில் நற்பெயரை சம்பாதித்து உள்ள ஒருவர் தன் தனி மனித வாழ்க்கையில் தடுமாறி விடலாம்.

எது நியாயம் என்பதில் இன்று பல் வேறு கருத்துக்கள் உள்ளன. சில உரிமைகள் பாகுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படையானது என்ற libertarian கருத்து (தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்பது போல) ஒரு அளவுகோலின் எதிர் முனையில் இருக்க, இன்னொரு முனையில் பெருமளவு மக்களுக்கு பயன் அளிக்க வேண்டுமானால் சிலரின் உரிமைகள் பறிக்கப் படுவதில் தவறில்லை என்ற utilitarian கருத்தும் இருக்கிறது. (இது “நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்லை” என்பது போல). இவை அரசியல்,பொருளாதார மற்றும் சமூக தளங்களிலும் இயங்குகின்றன. இதில் பெரிய சிரமம் சமூக உரிமைகளை பாகுபடுத்துவதும் அதை நடைமுறைப்படுத்துவதும். உதாரணத்திற்கு இரட்டை டம்ளர் முறையை ஒரு ஆணை பிறப்பித்து தடை செய்வது.

ஒரு மேல்தட்டு மனிதனோ, ஆண் மகனோ condescending ஆக நடந்து கொள்வதில் சமூக ஒழுங்கீனம் உள்ளது. அந்த வரம்பு மீறலை நெறிப்படுத்துவது சுலபம் அல்ல. சட்டத்தால் முடியாது. நமது கலாச்சாரம் சார்ந்த விஷயம் இது.

பிரச்சினையே நாம் எந்த நெறிகளை/உரிமைகளை அறுதி செய்வது என்பது தான்? அறத்தில் தாயார் பாதம் என்ற கதையில் கணவன் தன் அப்பாவின் பெட் பானை தன் மனைவியின் தலையில் கொட்டுகிறான். இந்த அநிதியை அந்த நாளில் (அல்லது இந்த நாளில்) சமூகம் தடுக்க முடியுமா? இந்த பெண்ணின் பேரன் தன் பாட்டியை பற்றி எழுதும் போது நடந்த கொடுமையையும், தன் பாட்டி அடைந்த அசிங்கம், இழந்த சுதந்திரம் பற்றி பேசாமல் நிகழ்ந்ததற்கு மாறாக வேறு ஒரு தோற்றத்தை புனைகிறான். இன்று இழைக்கப்படும் கொடுமைகள் கண்ணை இன்னும் உறுத்தவில்லை. சமூகத்தின் மனசாட்சியை இன்னும் தொடவில்லை.

அதே சமயம் இந்த அறவுணர்ச்சியை எந்த தர்க்கங்களுக்கும் உட்படுத்தாமல் தங்களின் நம்பிக்கை, சொந்த அனுபவம் கொண்டு சிலர் வெளிப்படுத்துகிறார்கள் - கேதேல் சாஹேப், அந்த செட்டி மனைவி.

கேதேல் சாஹேப் கதை பல கேள்விகளை எழுப்பி நம்மை அசர வைத்து விடுகிறது. ஒரு சமுகத்தில் trust என்ற அம்சம் எப்படி நம் பொருளியல் சார்ந்த உலகில் transaction costயை குறைக்க முடியும் என்பதை பொருளியலாளர்கள் எழுதியுள்ளார்கள்.

கவனிக்க: அந்த கடையில் கல்லா கிடையாது. காசை வாங்கி போட ஆள் இல்லை. பணத்தை திரும்பி தர எந்த அக்ரிமென்ட்டும் எழுதப் படவில்லை.எந்த கோர்ட்டும் தேவையில்லை. இருந்தும் பணம் திருப்பி தரப்படுகிறது. இதையெல்லாம் தன் தலையில் கணக்கு போட்டு கேதேல் சாஹேப் அந்த கடையை நடத்தவில்லை. அப்படியானால் அவரை எது உந்துகிறது? இப்படிப்பட்ட ஈகையாளர் ஏன் தன் தொழிலில் யாரையும் நம்பாமல் மீன்களை வாங்க தானே போக வேண்டும்? அதில் உள்ள செய்தி என்ன?

வினாக்களை எல்லாம் அந்தந்த கதைகளின் வழியே கோடிட்டு காட்டி விட்டு வெவ்வெறு தளங்களுக்கு ஜெயமோகனின் பார்வை விரைகின்றது. இன்னொரு பார்வை நேசமணி, அரசாங்க கட்டமைப்பின் உதவியை நாடாமல் நேரே ஆட்களை கூட்டி வருவது, அதை தொடரும் அந்த எழுச்சியின் குறியீடு. அதே சமயம் கதை அந்த கட்டமைப்புக்கான சாத்தியங்களையும் தேவையையும் காட்ட தவறவில்லை.

தம்பி ராமையா கதை, அரிதான, ரசிக்கத்தக்க கேலியுடன் சொல்லபட்டிருக்கிறது. எவ்வளவு எளிதாக சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. ராமையா சுலபமாக கூட்டத்தை நடத்துகிறார். விவாதம்,எதிர்விவாதத்தில் பங்கெடுக்கிறார். அந்த சூழல் சமீபத்தில் நடந்த நிகழ்வை கைக்காட்டுகிறது. பேச்சுரிமை,கூட்டம் கூடுவதற்கான உரிமைகளால் ஜனநாயகம் தழைக்கிறது. பொதுநலப்பண்பு (altruism) என்றாலே இன்று இகழ்ச்சியோடும், சந்தேகத்தோடும் பார்க்கும் சமூகதத்தின் நடுவே வாழ்கிறோம்.

நியாயம், அறம் பற்றிய கோட்பாடுகளை தனியாக புத்தக வடிவில் ஜெயமோகனின் பார்வையில் எதிர்பார்க்கிறேன். அறத்தை பற்றிய அவரின் பங்களிப்பு நமது அறம் பற்றிய புரிதலையும், செயல்பாட்டையும் மறு பரிசீலனை செய்வதோடு அறத்தை பற்றிய முக்கிய பங்களிப்பாக அமையும்.


க.நடராஜன்


(*நீதி என்றால் சமுகத்தில் நீதி கிடைக்க தேவையான கட்டமைப்பு மற்றும் organizational propriety, நியாயம் என்றால் இவற்றை தாண்டி விரிவான அர்த்தத்தை கொண்டது என்றும் அவை அந்த சமூகத்தின் behavior modes, social norms and practice ஆகியவைகளால் எழுந்து மக்களால் அடையப்படும் நியாயத்தை பற்றியது என்று அமர்த்யா சென் விளக்குகிறார் - The Idea of Justice புத்தகத்திலும், பிற பதிவுகளிலும்)அறம் – சிறுகதைத் தொகுப்பு , 400 பக்கங்கள் , விலை.ரூ.250, வெளியீடு : வம்சி பதிப்பகம் – திருவண்ணாமலை, அக்டோபர்,2011

Jeyamohan’s Aram Short Story


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...