அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஓவியர்கள் சினிமாவுக்கு வரவேண்டும் - கமல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   21 , 2010  02:58:19 IST

கடந்த வெள்ளியன்று மாலை ஆழ்வார்பேட்டை ராஜ்கமல் அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்வில் சுந்தரபுத்தன் எழுதிய வண்ணங்களின் வாழ்க்கை நூலை கமல்ஹாசன் வெளியிட தமிழக சுற்றுலாத் துறைச் செயலர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பெற்றுக்கொண்டார். இந்நூலில் 56 நவீன ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக நிகழும் விழாக்களைப் போல வாழ்த்துறை, கருத்துறைகள் இடம்பெறவில்லை. நூல் வெளியீடு முடிந்தம் அங்கு வந்திருந்த ஒவிய சிற்பக் கலைஞர்களுடன் வெகு இயல்பாக உரையாடினார் கமல்ஹாசன். இவ்வுரையாடலில் வெ. இறையன்பு கலந்துகொண்டு வழிநடத்தினார். மகாத்மாவின் வாழ்க்கையைப் பற்றி பேசத் தொடங்கி சோழர்களின் ஆட்சி வரை உரையாடல் தொடர்ந்தது. ஓவிய மாணவர்கள் திரைப்படத்துறையில் கலை இயக்கத்திற்க்கு வரவேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டார் கமல்.

திரைப்பட இயக்குநர்களுடன் சேர்ந்து செயல்படும்போது அவர்கள் வெற்றிகரமான கலை இயக்குநர்களாக வளரமுடியும் என்று சுட்டிக்காட்டினார். ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த அவர், ஆதி மனிதனின் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் ஜீன்கள் இளைஞர் விருமாண்டியிடம் இருப்பது வரையிலான தகவல்கலை பகிர்ந்துகொண்டார். இனிய இலக்கிய மாலையாக இருந்ததாகவும், இவ்விழாவை வாழ்வில் மறக்கமுடியாது என்றும் ஓவியர்கள் நெகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் சென்னை ஓவியக் கல்லூரி முதல்வர் என். மனோகரன், விஸ்வம், ஆர்ட் டைரக்டர் ஜேகே, சந்தானம், பரதன், மாற்கு, ஆர். சீனிவாசன், புகழேந்தி, கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன், த சன்டே இந்தியன் முதன்மை ஆசிரியர் என். அசோகன் மற்றும் பதி¢ப்பாளர் பூபதி ஆகியோர் கலந்கொண்டனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...