அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஐதராபாத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு வைகோ மட்டுமே கண்டனம்

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   20 , 2010  11:36:24 IST

மத்திய அரசு நிறுவனத்தின் தேர்வை எழுதச்சென்ற தமிழக மாணவர்கள் மீது தெலுங்கு வெறியர்கள் தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோவின் இன்றைய அறிக்கை:

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் மத்திய அரசு நிறுவனமான, பெல் நிறுவனம் பணியிடங்களுக்கு நடத்திய எழுத்துத் தேர்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து சென்ற, தமிழக இளைஞர்கள் தங்கள் திறமையால் வெற்றிபெற்ற நிலையில், அடுத்துநடைபெற இருந்த நேர்முகத் தேர்வை எதிர்நோக்கி இருந்த சூழலில், தெலுங்கானா வெறியர்கள் தமிழக இளைஞர்களை பயங்கரமாகத் தாக்கி உள்ளனர். அதில் பலர் காயம் அடைந்து உள்ளனர். அங்கிருந்து தப்பியோடி வந்தவர்கள் தமிழகக் காவல்துறையிடம் புகார் கொடுத்து இருக்கின்றனர்.

தேர்வு எழுதிய இளைஞர்களில் பலர் இன்னும் ஐதராபாத்தில் இருந்து திரும்பவில்லை. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அவர்கள்மீது உரிய நடவடிக்கையை ஆந்திர மாநில அரசும் காவல்துறையும் மேற்கொள்வதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.பெல் நிறுவன நேர்முகத் தேர்வை நடத்துவதற்கும், அதில் தமிழக இளைஞர்கள் பாதுகாப்பாக பங்கேற்பதற்கும், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு நிறுவனத்தின் தேர்வில் கலந்துகொண்ட தமிழக இளைஞர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால், மத்திய அரசின் கவனத்துக்கும், தமிழகஅரசு கொண்டு சென்று நேர்முகத் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கும், தமிழக இளைஞர்கள் கலந்து கொள்ளவும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...