அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அஜீத் மீது வழக்கு:முதல்வர் - அஜீத் திடீர் சந்திப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   19 , 2010  11:18:00 IST

நடிகர் அஜீத் மீது ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.

திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே. நகர் போலீசார், நடிகர் அஜீத் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் அளித்த புகார் மனுவில்,'கடந்த 6ஆம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அதில் அஜீத் பேசும்போது, சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் வரவேண்டும் என்று மிரட்டுகிறார்கள். நடிகர்களை மிரட்டுவதை நீங்கள்தான் (முதல்வர்) தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு நான் நக்கீரன் வார இதழில் 'அஜீத் தமிழ்நாட்டில் நடித்துக்கொண்டிருக்கிறாய். தமிழ் மக்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். தமிழ் சாப்பாட்டை சாப்பிடுகிறாய். இப்படி இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், போராட வரமாட்டாயா?'' என்று பேட்டியளித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து அஜீத்தின் நேரடி பார்வையில் அவரின் மேலாளரும், தென் சென்னை மாவட்ட அஜீத் மன்றத் தலைவர் ராஜாவும், அஜீத்தின் உதவியாளரும், இன்னும் சில ரவுடிகளும் சேர்ந்து நான் இல்லாத சமயத்தில் வீட்டிற்கு வந்து, 'ஜாக்குவார் வெளியே வாடா, உன் தலையை எடுக்கச் சொல்லி எங்க தல சொல்லியிருக்காரு' என்று கூறி கட்டையால் ஜன்னல்களை அடித்தார்கள். எனது ஸ்கார்பியோ டி.என்.09.ஏ.எச்.3399 எண் கொண்ட காரை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதெல்லாம் அஜீத்திற்கு தெரிந்தே நடந்ததுதான். அவருடைய நேரடி பார்வையில் நடந்ததால், அவர் மீது எப்ஐஆர் போட வேண்டும்' என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஜாக்குவார் கொடுத்த புகாரை விசாரித்த கே.கே. நகர் போலீசார் அஜீத் உட்பட 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலை நடிகர் அஜீத் திடீரென்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார்.இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.இந்த சந்திப்பிற்கு ரஜினி ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜீத், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாக கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...