அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதுக்கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது - ஞானக்கூத்தனுக்கு சாரல் விருது

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   14 , 2010  12:00:38 IST

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியின் ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது வழங்கும் விழா பிலிம் சேம்பர் அரங்கில் நடந்தது. இந்த ஆண்டுக்கான சாரல் விருதை இலக்கியப் பங்களிப்புக்காக கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமி வழங்கினார். இந்த விருது 50 ஆயிரம் ரூபாய் பணமும், சான்றிதழ் மற்றும் சிற்பமும் அடங்கியது. இவ்விழாவில் ஜேடி எழுதிய கனவுகளைப் பேச வந்தவன் கவிதை நூலும், நாதஸ்வரம் ஆவணப்படத்தின் திரைக்கதை நூலும் வெளியிடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு பேசியவர்களின¢ பேச்சிலிருந்து...


இயக்குநர் பாலுமகேந்திரா

என்னுடைய பதின்வயதுகளில் முயற்சித்து அடைந்த இலக்கிய ரசனை இன்னும் இருக்க்கிறது. நான் ஒரு இலக்கிய உபாசகன். அன்று இலக்கியத்தில் ஏற்பட்ட பிடிப்பு தீவிரமாக இருக்கிறது. எனது திரைப்படப்பள்ளியில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக வைத்திருக்கிறேன். எழுத்து, ஓவியம், சிற்பம் என எல்லா படைப்புகளுக்கும் உருவமும் உள்ளடக்கமும் அவசியம். நவீன கவிதை ஞானக்கூத்தனிடமிருந்து தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். மிகச்சிறந்த படைப்பாளியான அவருக்கு சாரல் விருது வழங்கப்பட்டிருப்பதில் ஒரு வாசகனாக எனக்கு மகிழ்ச்சி.


எஸ்.ராமகிருஷ்ணன்

இன்று ஒரு புதுக்கவிதைக்கு முறையான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக புதுக்கவிதை பற்றி பேசியும் எழுதியும் வருகிறவர் ஞானக்கூத்தன். இவர் மரபு தெரிந்து புதுக்கவிதை எழுதியவர். இவரைப் போன்றவர்கள் புதுக்கவிதைக்கு ஒரு மரியாதை ஏற்படுத்தித்தந்திருக்கிறார்கள். இவர் ஒரு முன்னோடி கவி ஆளுமை. டி.எஸ்.எலியட்டைப்போல ஒரு கவிதை இயலையே உருவாக்கி நினைக்கிறார். இவருடைய கவிதையைப் படித்தால் 50 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். தினசரி வாழ்க்கையில் கற்பனை குறைந்துவிட்டது. நல்ல கவிஞர்களை கௌரவிக்காத சமூகம் உயர்நிலையை அடையாது.


ந.முத்துசாமி

பாரதிக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த அரிய கவிஞர் ஞானக்கூத்தன். இருவரும் பக்கத்து ஊர்க்காரர்கள். இந்தச் சாரல் விருதை எல்லா தமிழர்களும் பாராட்ட வேண்டும்.


ஞானக்கூத்தன் ஏற்புரை ஆற்றினார். அதிலிருந்து...

இந்த சாரல் விருதை அடுத்த வருடம் கொடுப்பதாக இருந்தால் கூரியரில் அனுப்பிவிடுங்கள் என்று சொல்லியிருப்பேன். ஏனெனில் வயதாக ஆக தாறுமாறாக பேசிவிடுவேனோ என்று கவலைப்படுகிறேன். இந்த விருதுக்கான சிற்பத்தைத் தொடும்போது கடவுளைத் தொடுவதாக உணர்கிறேன். காலம் அழிக்க அழிக்க கவிஞர்கள் மீண்டும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். நிகழ்காலத்தை எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. நான் எழுதியவை களையா பயிரா? என்று தெரியவில்லை. சிலர் களை என்கிறார்கள். சிலர் பயிர் என்கிறார்கள். ஒருசிலர் அதை சாப்பிடவும் செய்கிறார்கள். இது பயிர். இதில் என்ன சுவை இருக்கிறது? தமிழ்ச்சுவை. ஆடு மாடுகள் மட்டுமல்ல சகல ஜீவராசிகளுக்கும் பிடித்ததாக இருக்கிறது.தமிழச்சி தங்கபாண்டியன், ரகுபதி ஐஏஎஸ், ரவிசுப்ரமணியன் மற்றும் தேனுகா பேசினார்கள். இயக்குநர் ஜேடி வரவேற்புரை ஆற்றினார். இயக்குநர் ஜெர்ரி சுருக்கமான நன்றியுரை நிகழ்த்தினார். விழாவின் இறுதியில் நாதஸ்வரம் ஆவணப்படம் திரையிடப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...