அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

குண்டர்களும் எழுத்தாளர்களும்:நூல் வெளியீட்டு விழாவில் காரசாரம்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   07 , 2010  01:13:42 IST

சென்னையில் கடந்த செவ்வாய் மாலை எழுத்தாளர் சந்திராவின் இரு நூட்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. 'காட்டின் பெருங்கனவு' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'நீங்கிச் செல்லும் பேரன்பு' என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன.
விழாவில் பேசிய ஷோபா சக்தி திரைத்துரையில் இருக்கும் சந்திரா போன்ற எழுத்தாளர்கள் தரமான படங்களைப் படைக்கவேண்டும். திராவிட இயக்கப் படங்களை விமர்சிக்கும் இன்றைய எழுத்தாளர்கள் தாங்கள் வசனம் எழுதிய படங்களில் என்ன சாதித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஒவியர் மருது, தற்போது இலக்கியத்துக்கும் சினிமாவிர்க்கும் நல்லுறவு நிலவுவதாகவே கருத்து தெரிவித்தார்.
இவரை அடுத்து பேச வந்த எழுத்தாளர் அஜயன் பாலா சந்திராவின் கவிதையில் சோகம் தூக்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சிறுகதைகளில் வடிவம் உள்ளடக்கம் ஆகியவை பற்றியும் பெசிக்கொண்டு வந்தவர் கடைசியில் திடீரென டிராக் மாறினார். 'இப்போது எழுத்தாளர்களை குண்டர்களாக ஒரு பதிப்பக முதலாளி மாற்றி வருகிறார். ஒரு எழுத்தாளர் புத்தகத்தை இன்னொருவர் மேடையிலேயே கிழிக்கிறார்' என்றவர் சமீபத்தைய உயிர்மை இதழில் அமீர் படத்தை அட்டையில் வெளியிட்டிருப்பது மிகப்பெரிய வன்முறை என்று கூறினார். கூட்டத்தில் இருந்த ஒருவர் அதில் என்ன தப்பு என்று எதிர்குரல் எழுப்பினார்.’ நாயகன் காட் பாதர் படத்தின் தழுவல். அதுபோலதான் யோகியும். அதற்காக திருடன் என்றெல்லாம் எழுதியிருப்பது தவறல்லவா?’ என்று அஜயன் பாலா தொடர்ந்து பேச, மேடையிலிருந்த பதிப்பாளர் சுதிர் செந்தில் அதற்கான மேடை இதுவல்ல என்று நெளிய வேண்டி வந்தது. ஆனால் எனக்கு மேடை கிடைத்தது நான் பேசுகிறேன் என்று சலசலப்பைக் கிளப்பினார் அஜயன்.
அவரைத் தொடர்ந்து பாடலாசிரியர் குத்துகுமார்( முத்துக்குமாருக்கு பெயர் உபயம்: இயக்குனர் தாமிரா) அமைதியாகவே உரை நிகழ்த்தினார். சந்திராவின் கவிதைத் தொகுப்பு தமிழின் தலை சிறந்த தொகுப்புகளில் ஒன்று என்ற அவர், தந்தையை இழந்த பெண்ணின் சோகம் தெரிவதாகவும் அப்பெண்ணின் பார்வையில் அதில் இருக்கும் சோகம் நியாயமானதே என்றவர் தந்தைக்கும் மகளுக்குமான உறவு தமிழில் அதிகம் பதிவாகவில்லை என்பதை இது நிவர்த்தி செய்வதாகக் குறிப்பிட்டார்.
ஆங்கிலக் கவிஞரும் விமர்சகருமான மீனா கந்தசாமி, சந்திராவின் கதைகள் குறித்து ஆழமாகப் பேசினார். இக்கதைகளில் வரும் பெண்கள் அசாதாரணமான மன உறுதி கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அதை பெண்ணியம் என்ற நோக்கில் நான் பார்க்கிறேன். என்ற மீனா, அவரது கதைகளில் வரும் பெண்களின் பெயர்கள் கூட யோசித்து வைக்கப் பட்டிருக்கின்றன என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த கவிஞர் சமயவேல் சந்திராவை தன் மகள் என்று குறிப்பிட்டுப்பேசினார். சினிமாவில் சந்திரா ஒரு இயக்குனாராக சாதிக்க வேண்டும் என்ற தன் ஆவலையும் குறிப்பிட்டார்.
இயக்குனர் சசிகுமார் தான் பேச நினைத்தவற்றை மற்றவர்கள் பேசிவிட்டார்கள் என்கிற ரீதியில் பேசி எஸ்கேப் ஆனார்.
கடைசியில் ஏற்புரை ஆற்ற வந்த சந்திரா, எல்லோருக்கும் நனறி என்று மட்டும் சொல்லி தன் உரையை முடித்துக்கொண்ட்டார். சுதிர் செந்தில் வரவேற்புரை நல்கினார். சிபிச்செல்வன் நன்றியுரை வழங்கினார். தாமிரா தொகுத்து வழங்கினார். விழாவுக்கு வந்திருந்த நடிகர் ஜெய், மேடையில் சும்மா உட்கார்ந்திருந்து தன் பங்களிப்பை வழங்கினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...