அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சிடிகள் ஏன் வெளியே வருவதில்லை - 2009

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2010  12:06:59 IST

2009 டாப் டென் நிகழ்வுகள்


2009. இது ஒரு கொந்தளிப்பான ஆண்டு. பல பரபரப்பான நிகழ்வுகளைக் கடந்து 2010க்குள் நுழைகிறோம். கடந்த காலத்தின் பத்து முக்கியமான நிகழ்வுகளை இங்கு அசைபோடலாம்:

புலிகளின் வீழ்ச்சியும்(?) பிரபாகரன் மரணச் செய்தியும்

அது நடந்தது மே பதினேழா, மே பதினெட்டா எதுவென்று தெரியவில்லை. சிங்கள அரசு பிரபாகரன்கொல்லப்பட்டார் என்று சொன்னபோது தமிழகத்தில் மாபெரும் அதிர்ச்சி. எல்லோருக்கும் எதையோ இழந்தது போன்ற உணர்வு. ஆனால் இன்னும் பிரபாகரன் இறக்கவில்லை என்று அடித்துச் சொல்லிவரும் தலைவர்களும் இருக்கிறார்கள்.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வாங்கிக் குவித்த ஆயுதங்களும் இந்திய அரசின் ரகசியமான அதேசமயம் வலுவான உதவிகளும் புலிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. யுத்தம் நடந்த சுமார் மூன்று மாதங்களும் விமான குண்டு வீச்சுக்குப் பலியான தமிழர்கள் ரத்தம் பூமியை நனைத்தது. கடைசி சில நாட்களில் நடந்த கொடூரங்கள் தமிழ் இனம் இதுவரை கண்டிராத அவலம். சுமார் 50000 தமிழர்களைப் பலி கொண்ட இந்த யுத்தத்தின் இறுதியில் தப்பிப்பிழைத்த மூன்று லட்சம் தமிழர்கள் அகதி முகாம்கள் என்கிற திறந்த வெளிச்சிறைகளில் அடைக்கலம் புகுந்தனர். அங்கு நடந்த கொடுமைகள் விவரிக்க இயலாதவை. இதற்கிடையில் புலிகள் இயக்கம் சார்பாக இன்னொரு போராட்டத்தை வெளியிலிருந்து கட்டமைக்க முயன்ற கேபி கைதானார். இன்னும் விசாரணை நடக்கிறது. சுமார் 10000 பேர் போராளிகள் என்ற பெயரில் இலங்கை சிறைகளில் இருப்பதாகவும் தெரிகிறது.

முத்துகுமார் தற்கொலை & தமிழகக் கொந்தளிப்பு

இலங்கையில் தமிழினம் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக உயிராயுதம் ஏந்துகிறேன் என்று சொல்லி சென்னை சாஸ்திரி பவன் எதிராக ஜனவரி 29 ஆம் தேதி தீக்குளித்து மரணமடைந்தார் முத்துகுமார். அத்தனை தமிழர்களின் மனச்சாட்சியையும் கேள்விக்குள்ளாக்கி தமிழகத்தில் ஒரு பலத்த கண்டனக்குரலை எழுப்புவதற்கான முயற்சி அது. பெரும் உணர்வலைகளை அது எழுப்பியது. அவரைத் தொடர்ந்து மேலும் ஆறு பேர் உயிர்த்தியாகம் செய்தனர். தன்னெழுச்சியாக உணர்வுள்ள இளைஞர்களிடையே உருவான போர்க்குரல், மொழிப்போர் காலகட்டத்தை அது நினைவூட்டினாலும், எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியவில்லை. அதை முன்னெடுத்துச் செல்ல நம்பகத்தன்மை வாய்ந்த தலைமை உருவாகவில்லை. முத்துக்குமார் அஞ்சியவாறே பெரும் இனப்படுகொலை இலங்கையில் நடந்து முடிந்தது.

நாடாளுமன்றத் தேர்தல்

காங்கிரஸ் & திமுக இரண்டு பெரிய கட்சிகளும் விடுதலைச்சிறுத்தைகள் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் எதிரணியில் நிற்க 2009 நாடாளுமன்றத்தேர்தல் களம் கடும்போட்டியைச் சந்தித்தது. அதிமுக தலைமையில் பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் இருந்தன. தேமுதிக தனியே நின்றது. ஈழத்தமிழர்களுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்த தெம்பில் ஜெ, ஈழத்தில் தனியரசு பெற்றுத்தருவோம் என்றார். ஒட்டு மொத்த தேர்தல் களமும் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் ஈழம் தொடர்புடையதாக மாறியது. கடைசியில் திமுக காங்கிரஸ் அணியே பெரும்பான்மை பெற்றது. 28 இடங்களில் வெற்றி. படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்ட காங்கிரஸ் தமிழகத்தில் 9 இடங்களில் வெல்ல, மத்தியில் தனித்து 202 இடங்களை காங்கிரஸ் வென்று ஆட்சிக்கு வந்தது.


ரகுமான் & ஆஸ்கர்

இது ஒரு தமிழனின் கனவு நிறைவேறிய நாள். ரோஜாவில் அறிமுகமாகி இந்திய எல்லைகளைத்தாண்டி சர்வதேச அரங்கில் ஏ.ஆர்.ரகுமான் முடிசூடினார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஜெய் ஹோ பாடல் ரகுமானுக்கு 2009ல் ஆஸ்கர் வாங்கித்தந்தது. அதற்கு ஒரு மாதம் முன்பாக அவருக்கு கோல்டன் ஃக்ளோப் அவார்டும் கிடைத்தது. எப்போதும் போல ரகுமான் அடக்கி வாசித்தார். இந்தியாவே மகிழ்ந்தது. கேரளத்தின் ரசூல் பூக்குட்டிக்கும் சவுண்ட் மிக்சிங்கிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. எல்லோருக்கும் இதுவரை ஏக்கமாகவே இருந்த ஆஸ்கர் இப்போது வந்தாகிவிட்டது. இனி எப்போது ஒரு தமிழ்ப்படம் அதுபோன்ற பெருமையை அடையும் என்ற அடுத்த கட்ட கனவுக்கு தமிழன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு விட்டான்.

முக ஸ்டாலின் துணை முதல்வர்

2009 நாடாளுமன்றத்தேர்தல் திமுக தலைவருக்கு மிக முக்கியமானது. ஏனெனில் ஈழப்பிரசினையால் தமிழினத்தலைவர் என்ற அவரது பெருமை கேள்விக்குரியதாக இருந்தது. வாரிசுகள் உரிமைக்காகப் போராடினார்கள். அவர்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டியதாக இருந்தது. மாறன்கள் குடும்பத்துடன் இருந்த பிரச்னயை அரும்பாடு பட்டு தேர்தலுக்கு முன்னதாகவே தீர்த்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னால் அழகிரிக்கு மத்தியில் அமைச்சர் பதவி கொடுத்த கையுடன் ஸ்டாலினை தமிழகத்தில் துணை முதல்வர் என்று அறிவித்தார். வாரிசு மோதல்கள் முடிவுக்கு வந்தன. கலைஞர் குடும்பத்தில் எல்லாம் ஒழுங்குக்கு வந்தன. கனிமொழி எம்பி ஆனார். அவரவருக்கு எல்லைகள் பிரிக்கப்பட்டன. இப்போது அடுத்த தலைமுறை வாரிசுகள் சினிமாவை ஆள்கிறார்கள். உதயநிதியும் துரைதயாநிதியும் பெரிய தயாரிப்பாளர்கள் ஆகிவிட, சன் டிவி சுட்டுவிரலில் கோடம்பாக்கத்தை ஆட்டுவிக்கிறது, முன்பை விட வலுவாக.


ராஜசேகர ரெட்டி மரணம்

வரலாற்றை மாற்றி அமைக்கும் சம்பவங்கள் திடீரென்றுதான் நடக்கும். அப்படித்தான் ஒரு மதியவேளையில் ஆந்திரமுதல்வர் ராஜசேகரரெட்டியின் ஹெலிகாப்டர் காணாமல் போனதாகத் தகவல்வந்தது. நாட்டின் அனைத்து முனைகளும் காணாமல் போன ஹெல்காப்டரைத் தேட முடுக்கிவிடப்பட்டன. மறுநாள் மழையில் தடுமாறி மலையில் மோதி விழுந்த தகவல் வந்தது. ரெட்டியின் மரணம் ஆந்திர காங்கிரசுக்கு பெரும் இழப்பு. தமிழகத்திலும் அவர் மரணத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மரணத்துக்கு மறுநாளே யார் அடுத்த முதல்வர் என்ற போட்டி தொடங்கியது. மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக ஆசைப்பட, காங்கிரஸ் மேலிடம் மறுத்தது. ரோசையா முதல்வர் ஆனார். காங்கிரசில் சேர்வதற்காக தெலுங்கு தேசத்தில் இருந்து விலகிய ரோஜா, திக்குதெரியாத காட்டில் நிற்கிறார். ஆனால் காங்கிரசில் சேர திட்டமிட்டிருந்த விஜயசாந்தி இம்மரணத்துக்குப் பின்னால் சுதாரித்துக் கொண்டார்.

தெலுங்கானா

ராஜசேகர ரெட்டி இல்லாத நிலையில் காணாமல் போயிருந்த டிஆர்எஸ் தலைவர் சந்திர சேகர் ராவ், தெலுங்கானாவுக்கான போராட்டத்தை சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி உயிர்ப்பித்தார். 10 நாட்களுக்கும் மேல் உண்ணாவிரதம் நீள, தெலுங்கானா பகுதி கொந்தளித்தது. நடுராத்திரியில் சிதம்பரம், தெலுங்கான பிரிக்கப்படும் என்று அறிவிக்க, ராவ் உண்ணாவிரதத்தை உடனே முடித்தார். ஆனால் எதிர்பராத விதமாக, ஆந்திராவின் மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இதை எதிர்த்தனர். அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக ராயல்சீமா, கடலோரா ஆந்திரா கார எம் எம்.ஏக்கள் ராஜினாமா செய்ய, மீண்டும் ஆந்திரா ஸ்தம்பித்தது. கவர்னர் ஆட்சியை நோக்கி ஆந்திரா செல்ல, நிலைமையை சீர்செய்ய மத்திய அரசு பகீரதப் பிரயதனம் செய்கிறது. தெலுங்கானாவுக்காக 10 நாட்களுக்கும் மேல் உண்ணாவிரதம் இருந்த ராவுடன் தமிழ்நாட்டில் ஈழத்துக்காக ஒரு நாள், மூன்று நாள், ஆறு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த பெருமகன்கள், பெருமாட்டிகளை ஒப்பிட்டுப்பாருங்கள். கசக்கும்!

விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் & அரசியலில் நடிகர்கள்

இந்த ஆண்டு அரசியல் ஆர்வம் கொண்ட நடிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. நாடாளுமன்றத்தேர்தலில் கூட்டணிக்கு அழைத்தவர்களுக்கெல்லாம் மறுப்பு சொல்லிவிட்டு தனித்து நின்ற விஜயகாந்த் தன் வாக்கு வங்கியை எட்டிலிருந்து பதினொரு சதவிகிதமாக உயர்த்திக்கொண்டார். திருமங்கலம் இடைத்தேர்தலில் 1000த்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றதிலிருந்து சரத்குமார் காணாமல் போனார். இப்போது திமுகவுக்கு துணை ஆவர்த்தனாமாகிவிட்டார். நடிகர் விஜய் ஒரு இயக்கம் தொடங்கினார். ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்தார். ஆனால் சூழ்நிலை சரியாக இல்லை. சன் டிவிக்காரர்கள் வேட்டைக்காரனை சில மாதங்கள் முடக்கிவைத்து இளைய தளபதிக்கு பாடம் புகட்டினர். இப்போதைகு விஜய் பதுங்குகிறார். அறுபது வயதில் சூப்பர்ஸ்டார் ரஜினி மந்திரப்புன்னகையுடன் எந்திரனில் பிஸி!


திருமங்கலம் இடைத்தேர்தல்

2009ஐ இடைத்தேர்தல்களின் ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். திருமங்கலத்தில் நடந்த தேர்தலில் அழகிரி தேர்தல் நிர்வாகத்தின் புதிய அத்தியாயத்தைத் சரியான திட்டமிடலுடன் இணைத்து பிற அரசியல் கட்சிகளை கதறவைத்தார். வாக்காளர்கள் இடைத்தேர்தலை திருவிழாவாக எண்ணினர். அதன் பிறகு நடந்த 5 இடைத்தேர்தல்களை எதிர்கட்சிகள் புறக்கணித்தன. எம். எல்.ஏக்கள் மரணமடைந்தால் பொதுவாக நடக்கும் தேர்தல் இப்போது எம் எல்.ஏக்கள் கட்சி மாறுவதால் நடக்கிறது. ராஜ கண்ணப்பன் திமுகவிலிருந்து அதிமுகவுக்குப் போனார். கம்பம் ராமகிருஷ்ணன், மதிமுகவிலிருந்து திமுக வந்தார். அதே போல அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவிலிருந்து திமுக வந்தார். எல்லா இடங்களிலும் இடைத்தேர்தல். ஆளுங்கட்சித் தரப்பே எல்லா இடங்களிலும் வெற்றி! ஜனநாயகம் தோற்றால் அதைப் பற்றி யார் ஐயா கவலைப்படப்போகிறார்கள்?


என்.டி திவாரியும் காஞ்சி அர்ச்சகரும்

2009ல் டெஸ்டோஸ்டீரான் மேட்டர்களுக்குப் பஞ்சமில்லை. காஞ்சியில் ஒரு அர்ச்சகர் கருவறையில் மேற்கொண்ட லீலைகள் கடவுளர்களின் லீலைகளை மிஞ்சின. அவரே செல்போனில் அவற்றைப் படம் எடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டார். அர்ச்சகர் சிடிகள் விற்பனை அமோகமாக நடந்தது. இது இப்படியென்றால் தெலுங்கானாவால் ஆந்திரா சூடாகி இருந்தபோது மூன்று பெண்களுடன் சூடாக ஆந்திர கவர்னர் என்.டி, திவாரி இருந்த விஷயம் வெளியே தெரிந்தது. திவாரிக்கு வயது 85 என்கிறார்கள். பதவியை ராஜினாமா செய்த திவாரி, தெலுங்கானா விஷயத்தைத் தணிப்பதற்காக தன்னை சிக்க வைத்து விட்டனர் என்று கவலையே இன்றி பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் இப்படி பரபரப்பான அரசியல் சிடிகள் ஏன் வெளியே வருவதில்லை என்ற கேள்வியுடன் 2009 முடிகிறது.

- அந்திமழை


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...