அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டாப் டென் பாடல்கள் 2009

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2010  11:53:15 IST

எத்தனையோ அழகான பாடல்கள் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டுமே சிறந்த பத்தாக தேர்வு செய்வது வருத்தமே. இன்னும் பத்துப்பாடல்களையும் சிறந்தவையாக தேர்வு செய்யமுடியும். அதை வாசகர்கள் விருப்பத்துக்கே வீட்டு விடுகிறோம்.

1.ஓடி ஓடி விளையாடு: மாசிலாமணி
போன ஆண்டு நாக்க மூக்க பாடல் வந்து பட்டையைக்கிளப்பியது. அதே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டப்பாடல். அந்த அளவுக்கு இல்லையென்றாலும் ஓகேதான். நகுலுக்கு இன்னொரு அடி எடுத்துவைக்கவும் சன்னுக்கு இளைஞர்களை ஈர்க்கவும் உதவியது.

2.டாடி மம்மி வீட்டில் இல்ல..: வில்லு
பாட்டு எழுதியவர் விவேகா. கொஞ்சம் வில்லங்கமான பாடல்தான். படம் படுத்துக்கொண்டாலும் பாட்டு ஹிட்.

3.விழி மூடி யோசித்தால்: அயன்
சூரியாவின் இந்த ஆண்டு ஹிட் படமான அயன், வெளிவந்து கலக்கியது. கே.வி. ஆனந்துக்கு நல்ல பெயர். தமன்னாவும் சூரியாவும் உருகும் இப்பாடல் தேன்.

4.அசிலி பிசிலி: ஆதவன்
மீண்டும் சூர்யா படத்தில் ஒரு பாடல். ஆதவன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும்... இந்த பாட்டு நிற்கிறது.

5.என் பேரு மீனாகுமாரி: கந்தசாமி
இப்படத்தில் எல்லாபாட்டுகளுமே அதிரடிதான். சீட்டுக் குலுக்கிப் பார்த்து இப்பாட்டை தேர்வு செய்ய வேண்டடிவந்தது. முமைத் கானுக்காக இப்பாட்டை நாங்கள் தேர்வு செய்ய வில்லை!

6.கரிகாலன் காலைப்போல: வேட்டைக்காரன்
படம் வெளிவருவதற்கு முன்பே இந்த அழகான வரிகளும் இனிமையான இசையும் கொண்ட பாடல் ஹிட்.

7.ஆடுங்கடா.. மச்சான் ஆடுங்கடா: நாடோடிகள்
டிவியைத் திறந்தால் இந்த பாட்டை மிஸ் பண்ண முடியாது.
பாட்டும் ஓகே. காட்சிகளும் ஓகே.

8.அழகாய் பூக்குதே: நினைத்தாலே இனிக்கும்
மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படம்தான். தனுஜா அய்யர் கறுப்பு முகத்திரை காற்றில் அலைய பாடும் பாட்டு.

9.துப்பாக்கிப் பெண்ணே: பேராண்மை
ஜெகநாதனின் பேராண்மையில் காட்டுக்குள் அருவியில் ஐந்து பெண்கள் சந்தோஷமாய்ப் பாடும் பாடல். அருவியைப் போலவே குளுமையான இசை; துள்ளும் பெண்கள்

10.கூட வருவியா.. என் கூட: வால்மீகி
இழையும் பாடல். நிறைய பேரின் காலர் டியூனாக இடம்பெற்றது. பாடலைக் கேட்கையில் ஒரு வித மிதக்கும் உணர்வு ஏற்படும்.

- அந்திமழை


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...