அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழச்சி தங்கபாண்டியனின் வெற்றிக்கு காரணமான 2 ஆண்கள் :'மஞ்சணத்தி'வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   28 , 2009  23:42:07 IST

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கவிதை தொகுப்பு 'மஞ்சணத்தி'யை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாசரம் பள்ளி வளாகத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது.மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட அதை தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ராஜாமணி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.


விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து,'கடந்த 2007 ம் ஆண்டு நெல்லையில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டை நடத்தினோம். அது முதல் மாநாடாகும். அந்த மாநாடு நடத்த முதல்வர் கருணாநிதி எனக்கு அனுமதி தந்தார். மாநாட்டு நிகழ்ச்சியை எப்படி அமைக்கலாம்?, கொடியேற்றுவது யார்?, கொடியேற்றும் பொறுப்பு ஒரு மகளிருக்கு கொடுக்க வேண்டும் என்றபோது, தங்கபாண்டியன் மகள் தமிழச்சியை கொடியேற்ற வைக்கலாமா என்று முதல்வர் கருணாநிதி என்னிடம் கேட்டார்.

நான் அப்போது கூறினேன், அவருக்கு கொடுக்கலாம். ஆனால், அவர் ஆசிரியராக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாரே என்றேன். உடனே அவரிடம் போனில் பேசு என்று என்னிடம் அவர் உத்தரவிட்டார். உடனே, போனில் தமிழச்சி தங்கபாண்டியனிடம் பேசினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தந்தார்.

அவர் முதல் முதலாக கவிதை படிக்க காரணம் என்னவென்றால், உலகமே தந்தைதான் என்று எண்ணியிருந்த நேரத்தில், தந்தை தங்கபாண்டியன் திடீரென மறைந்துவிட்டார். அந்த சோகம் தாங்க முடியாமல் முதல் முதலாக கவிதையாக எழுதி வெளியிட்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன் தி.மு.க. மீது பற்று கொண்டவர். முதல் அமைச்சர் கருணாநிதி மீதும் பற்றும், பாசமும் கொண்டவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றவர். அவரது குடும்பமே கழக குடும்பம் ஆகும். தமிழச்சி தங்கபாண்டியன் அரசு பணியை விட்டார். அவர் தந்தை தங்கபாண்டியனும் அரசு பணியை ஒதுக்கிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வருங்காலத்தில் சிறப்பான அரசியலில் உச்சமான நிலைக்கு செல்வார். இசை, நாட்டியம், நாடகம் மற்றும் ஒளிக்காட்சி ஆகியவை மூலம் மஞ்சணத்தி கவிதை புத்தகம் விளக்கம் இங்கு காண்பிக்கப்பட்டது. இதுவரை இப்படி ஒரு புத்தக வெளியீட்டு விழாவை நான் கண்டு ரசித்தது இல்லை.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்வது உண்டு. ஆனால், தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெண்ணுக்கு பின்னால் 2 ஆண்கள் துணை நிற்கிறார்கள். ஒன்று அவரது தந்தை மறைந்த தங்கபாண்டியன், மற்றொன்று அவருடைய வாழ்க்கை துணைவர். எனவே, அவரது கணவரை நான் பாராட்டுகிறேன்' என்றார்.


கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதிலிருந்து,'தமிழ்நாட்டில் இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக, கிராமத்து பெண்களின் முன்னேற்றத்திற்காக, அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காது. அவர் 60 மணி நேரம் நின்றுகொண்டே நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அவரது கவனத்திற்கு வரும் ஏராளமான மக்களுக்கு குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு, அவர்களை படிக்கவைக்க பல உதவிகளை செய்து வருகிறார்.மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்து உதவி செய்து வருகிறார். எதிர்கால தமிழகம் உங்கள் பின்னால் நடைபோடும்' என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...