அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 'விளக்கு' விருது

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   26 , 2009  08:56:39 IST

அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான 'விளக்கு' சார்பில் புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விருதில் ரூ.40 ரொக்கப் பரிசும்,​ பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.
தமிழ்ப் படைப்பாளிகளான சி.சு.செல்லப்பா,​ பிரமிள்,​ கோவை ஞானி,​ நகுலன்,​ ஹெப்சிபா ஜேசுதாசன்,​ அம்பை,​ தேவதேவன் ஆகியோருக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் 'ஆகாசம் நீல நிறம்', 'ஊரும் காலம்', "உள்வாங்கும் உலகம்' உள்பட்ட 16 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் ஏழு கட்டுரைத் தொகுப்புகளையும் அவர் எழுதியுள்ளார்.
கவிஞர் விக்ரமாதித்யன் பத்திரிகையாளராகவும் தாய்,​ தராசு,​ நக்கீரன்,​ இதயம் பேசுகிறது,​ விசிட்டர் போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். ​


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...