அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகடமி விருது

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   26 , 2009  08:55:39 IST

சாகித்ய அகடமி விருது இந்த ஆண்டு ​​ கவி​ஞர் புவி​ய​ர​சுக்கு ​(79) வழங்​கப்​படுகிறது.கையொப்​பம் கவி​தைத் தொகு​திக்​காக இந்த விருது வழங்​கப்​ப​டு​கி​றது.​ இது இவர் பெறும் இரண்​டா​வது சாகித்ய அகா​டமி விருது.

ஏறத்​தாழ 80 நூல்​கள் எழு​தி​யி​ருக்​கும் புவி​ய​ர​சுக்கு இதற்கு முன் நஜ்​ருல் இஸ்​லாம் எழு​திய ரிபெள் அண்டு அதர் போயம்ஸ் என்ற நூலின் மொழி பெயர்ப்​புக்​காக ​(புரட்​சிக்​கா​ரன்)​ சாகித்ய அகடமி விருது வழங்​கப்​பட்​டது.​

வா​னம்​பாடி கவிதை இயக்​கத்தை ஆரம்​பித்​த​வர்​க​ளில் முக்​கி​ய​மா​ன​வ​ரான இவர், ​நாடக ஆசி​ரி​ய​ரா​க​வும் பெரும் பங்​க​ளிப்​பைச் செய்​த​வர்.​ மேடை நாட​கங்​கள் மட்​டு​மின்றி ஏரா​ள​மான தெரு நாட​கங்​க​ளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

கவி​ஞர் புவி​ய​ரசு கோவை​யைச் சேர்ந்​த​வர்.​ 30 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக தமி​ழா​சி​ரி​ய​ரா​கப் பணி​யாற்​றி​ய​வர்.​சர்​வோ​தய இயக்​கத்​தி​லும்,​​ தமி​ழ​ரசு இயக்​கத்​தி​லும் பங்​கு​கொண்டு தமிழ் ஆட்சி மொழி,​​ பயிற்சி மொழி மற்​றும் தமி​ழக எல்​லைப் போராட்​டங்​க​ளி​லும் பங்​கேற்று பல முறை சிறை சென்​ற​வர்.​

ஷேக்ஸ்​பி​ய​ரின் ஹேம்​லெட்,​ ஒத்​தல்லோ,​​ உமர்​க​யா​மின் ருபா​யத் போன்ற பல மொழி பெயர்ப்​பு​க​ளைத் தமி​ழுக்​குத் தந்​தி​ருக்​கும் இவர்,​​ இப்​போது தாஸ்​த​யா​வெஸ்​கி​யின் 1200 பக்க நாவ​லான கர​ம​ஸோவ் சகோ​த​ரர்​கள் என்ற ரஷிய நாவலை மொழி பெயர்த்​து​வ​ரு​கி​றார்.​

கமல்​ஹா​சன் தயா​ரித்து இயக்கி நடிக்​கும் 'மரு​த​நா​ய​கம்' படத்​தி​லும் பார்த்​தி​பன் நடித்த 'ஹவுஸ்​ஃ​புல்' படத்​தி​லும் பணி​யாற்​றி​ய​வர்.​


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...