அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஓவியங்கள் கட்டாயம் புரிந்துகொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   08 , 2009  03:16:17 IST

சென்னை எல்டாம்ஸ் சாலையில் மரங்களடர்ந்த பழமையான கட்டிடத்தில் உள்ளது Gallery Sri Parvati . அனுபவமுள்ள மூத்த ஓவியர்களுடன், துடிப்பான இளம் கலைஞர்களுக்கும் சரியான மேடை அமைத்து நல்ல ஓவியங்களுக்கு பெயர் கிடைக்க செய்ய வேண்டும் என்று கூறும் Gallery Sri Parvati ன் உரிமையாளர் லட்சுமி வெங்கட்ராமனுடனான அந்திமழைக்கான ஒரு பிரத்யோக உரையாடலின் தொகுப்பு.

நானும் ஓவியத்துறையும்...

அடிப்படையில் நான் ஒரு ஃபைன் ஆர்ட் ஸ்டூடண்ட் .பிறகு French படித்தேன். கொஞ்ச காலம் advertising துறையில் இருந்தேன்.1988 லிருந்து " the hindu " வில் art reviews எழுதியிருக்கேன்.அதனால சென்னையிலுள்ள பெரும்பாலான ஓவியர்களோட பரிச்சயம் உண்டு.டிசம்பர் சங்கீத சீஸனில் music reviews எழுதியிருக்கேன்.இப்படி தொடர்சியாக கலை மற்றும் ஓவியத்தோடு 25 ஆண்டு காலம் தொடர்பிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். சகோதரரின் மறைவிற்கு பின் குடும்ப சொத்தாக இந்த வீடு கிடைத்த பிறகு தான் art gallery க்கான எண்ணம் வந்து 2005 ல் தொடங்கினேன். நிறைய பேர் எல்டாம்ஸ் ரோடில் முக்கியமான இடத்தில் உள்ள சொத்து. மல்டிபிளக்ஸ் காம்பிளக்ஸ் கட்டினால் இவ்வளவு கிடைக்கும். என்று கணக்கெல்லாம் சொன்னார்கள்.எனக்கு இந்த புரதானமான பழைய வீட்டை அப்படி ஏதும் செய்ய விருப்பமில்லை.

ஓவிய கண்காட்சிகள்...

கண்காட்சிக்கான ஓவியங்களை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட தரத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்கிறேன். சிலசமயம் கண்காட்சிக்கு gallery ஐ வாடகைக்கு கொடுப்போம். அதற்காக பணம் கிடைக்கிறது என்பதற்காக எல்லோரையும் அனுமதிப்பதில்லை.ஓவியங்கள் தரமானதாக இருந்தால் மட்டுமே. சில சமயம் நல்ல திறமையான இளம் ஓவியர்கள் பெரிய அளவில் செலவு செய்து கண்காட்சி நடத்த முடியாத நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு மிக குறைவான விலையில் நடத்தி கொடுத்திருக்கிறோம்.சமீபத்தில் கூட கோவிலூர் மடத்தின் ஸ்பான்ஸர்ஷிப்பில் 12 ஓவியர்கள் கலந்து கொண்ட கேம்ப் நடத்தினோம். ஒரு வார காலம் ரிஷிகேஷில் நடந்த இந்த கேம்பில் ஓவியர்கள் உற்சாகத்தோடும் புத்துணர்ச்சியோடும் பங்கேற்றுள்ளார்கள்.

ஓவியங்களின் விலை...

ஓவியர்கள்தான் அவர்களுடைய படைப்புகளுக்கான விலையை முடிவு செய்கிறார்கள்.அதற்கு எங்களுடைய கருத்துகளை சொல்வோம்.உதாரணமாக ஒரு நல்ல இளம் படைப்பாளி தன்னுடைய ஓவியத்திற்கு 30,000 ரூபாய் நிர்ணயித்திருந்தார் அந்த ஓவியத்தின் தரத்திற்கு கண்டிப்பாக அது அதிகமாக போகுமென்று தெரிந்ததால் அவரை 60,000 ரூபாய்க்கு விற்க செய்தேன்.தற்போது அவரே தன்னுடைய படைப்புக்கு 1.5 லட்சம் நிர்ணயுங்கள் என்கிறார்.இதற்கு நேர்மாறாக சில சாதாரண படைப்புகளுக்கு அதிக விலையை எதிர்பார்ப்பார்கள்.இந்த விலைக்கு போகாது, இந்த அளவிற்கு வைக்கலாம் என்று சில guide line கொடுப்போம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக சதுர அடி கணக்கிலான விலை நிர்ணயம் பழக்கத்திற்கு வந்துள்ளது.ஒவ்வொரு ஓவியருக்கும் அவருடைய பிரபலத்தன்மை மற்றும் தரத்தினை பொறுத்து ஒரு சதுர அடி இவ்வளவு என்று தற்போது நிர்ணயிக்கபடுகிறது.ஓவியர்களின் பிரபலத்தன்மை அதிகரிக்கும்போது சதுர அடிக்கான விலையும் அதிகரிக்கிறது.

ஓவியத்துறையில் போலிகள்...

ஓவியர்களின் கையெழுத்தை வைத்து தான் கண்டறிய முடியும்.பெரும்பாலும் எல்லா ஓவியங்களையும் நேரடியாக ஓவியர்களிடமிருந்து தான் பெற முயற்சி செய்வோம். அப்படி இல்லாமல் சில மறைந்த ஓவியர்களின் பெயர்களை சொல்லி அவருடைய ஓவியம் என்னிடமிருந்தது, விற்க வேண்டும் என்று வருபவர்களிடமிருக்கும் ஓவியங்களை சம்பந்த பட்ட ஓவியரின் குடும்பத்தாரிடம் கையெழுத்து உண்மையானதா..என்று பரிசோதிப்போம். அதுவுமில்லாமல் அவருடைய சம காலத்து, நெருங்கிய ஓவியர்களிடமும் காண்பித்து சோதிப்பது உண்டு.

போலிகளின் விஷயத்தில் மறைந்த ஓவியர் ஆதிமூலத்தின் பெயரில் நடந்த ஓவிய மோசடி தற்போது விசாரணையில் உள்ளது.அதேபோல் அதேபோல் மாஸ்டர்ஸ் ஒர்க்கை பார்த்து செய்ததாக சொல்லி Computer Printout ல் கையெழுத்தை மட்டும் மாற்றம் செய்து 20 ஓவியங்களுக்கு மேல் விற்ற பின்னர் போலி என்று கண்டறியப்பட்டவர்களும் உண்டு.

நவீன ஓவியங்கள்...

இன்றைக்கு நவீன ஓவியத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது. post modern art, sir realistic art என்று நிறைய ஓவியர்கள் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறார்கள்.ஆனால் இவர்கள் எல்லோரும் sketching, portrait என்று படிப்படியாக முன்னேறி நவின ஓவியர்களாக evolve ஆனவர்கள்.

அப்படியில்லாமல் கை கால் கூட சரியாக வரைய தெரியாமல் modern art என்ற பெயரில் ஒன்றை வரைந்து விட்டு இது பிக்காஸோ பாணி,பால் கிலே(paul kle) பாணி என்று நிறைய இளைஞர்கள் சொல்வது அபத்தம். இன்றைய உலகம் fast food உலகம்.எதையும் தெரிந்து கொள்ளாமல் பணம் பண்ணவேண்டும் என்று நிறைய பேர் இதில் முயற்சிக்கிறார்கள்.

ஓவியங்களை வாங்குபவர்கள்...

ஓவியங்களை வாங்குபவர்களை மூன்றி வகையினராக காண்கிறேன்.

முதலாவது வகையினர் ஓவியங்களை ஒரு முதலீடாக ( investment) பார்க்கிறார்கள்.இன்றைக்கு இந்த ஓவியத்தை வாங்கி வைத்தால் 2 அல்லது 5 வருடங்கள் கழித்து இவை என்ன விலைக்கு போகும் என்று கணக்கிட்டு வாங்குபவர்கள்.

இரண்டாவது வகையினர் பிரபலமான ஓவியர்களின் பெயர்களை தங்கள் வீட்டு வரவேற்பறையில் மாட்டி பெருமை பட்டு கொள்கிறவர்கள்.இவர்களுக்கு ஓவியத்தின் தனித்தன்மையை விட யாருடைய ஓவியம் என்பது தான் முக்கியம். நிறைய நல்ல ஓவியங்களை பார்த்து யாருடையது என்று விசாரிப்பார்கள்.அவரா ? அவர் அவ்வளவு பிரபல்ம் கிடையாதே.? என்பார்கள்.

மூன்றாவது வகையினர் ஓவியத்தை பார்த்து, அதன் பால் கவரபட்டு வாங்குபவர்கள்.

பார்வையாளர்கள்...

நவீன ஓவியங்கள் குறித்து பொதுவாக மக்களுக்கு நிறைய மனத்தடைகள் உள்ளது.வெகுஜன ஊடகங்களும் நவீன ஓவியங்களை புறக்கணித்தே வருகிறது.modern art என்றாலே புரியாது, என்ற மனப்பான்மை உள்ளது.ஓவியங்கள் கண்டிப்பாக புரிய வேண்டும் என்ற அவசியம் என்ன ? பாடல்கள் கேட்கிறோம் இசையில் என்ன புரிகிறது ? நல்ல உணவு சாபிடும் போது சாப்பாட்டில் என்ன புரிகிறது.? காதுகளுக்கு இசை எப்படி ஒரு விருந்தோ , அப்படிதான் கண்களுக்கும் ஓவியம் ஒரு விருந்து .அதை ரசிக்கும் மனம் இருந்தால் போதும்.

சென்ற வாரம் ஒரு தாயும் மகளும் வந்திருந்தார்கள், ரிஷிகேஷ் கேம்ப் ஓவியங்களை பார்வையிட்டு கொண்டே வந்தவர்கள்.ஒரு abstract ஓவியத்திற்கு தாய் மகளுக்கு விரிவான விளக்கம் கொடுத்தார்.அந்த ஓவியத்திற்கு ஓவியர் என்னிடம் சொன்ன அதே விளக்கம். இது போல சிலர் சட்டென்று ஓவியத்தை புரிந்து கொள்கிறார்கள் .அபடி புரியாவிட்டாலும் பரவாயில்லை.ரசிக்க தெரிந்தால் போதும் .வாழ்க்கையில் எல்லா விஷயமும் நமக்கு புரிந்து விடுகிறதா என்ன.?

Best Show...

" celebrating the lines" என்ற பெயரில் மறைந்த ஓவியர் ஆதிமூலத்தின் நினைவாக 26 ஓவியர்கள் கலந்து கொண்ட கன்காட்சியை ஜுலை மாதம் நடத்தினோம். மிகவும் திருப்திகரமான கண்காட்சி அது. ஓவியர் ஆதிமூலத்திற்கான முதல் camp அதுதான். பரவலாக எல்லோரது பாராட்டையும் பெற்ற show அது.அடுத்ததாக சொல்லவேண்டுமானால் சென்ற மாதம் ஓவியர் சந்தான ராஜின் நினைவாக நடத்திய கண்காட்சி.

- சந்திப்பு : கௌதமன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...