அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சந்தான ராஜ் - என் மரியாதைக்குரிய குரு

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   03 , 2009  03:27:48 IST

சந்தான ராஜ் அமைதியாக இருப்பது நாம் செவிடோ என்று நினைக்க தோன்றும். அவர் அதிகம் பேசமாட்டார்.ஆனால் பேசினால் கத்தி போன்று கூர்மையான வார்த்தைகளாக வரும்.கலை கல்லூரியில் படித்தது தவிர மற்றபடி பள்ளிப்படிப்பு அதிகம் கிடையாது.ஆனால் என்னைப் போன்ற தமிழ் அறியாத மாணவர்களிடம் சுத்தமான ஆங்கிலத்தில் பேசுவார்.கலை மற்றும் வேறு அறிவார்ந்த விஷயங்களை பற்றி யாராவது அவரிடம் பேசினால் அப்போது அவருடைய நிகரற்ற படைப்பாற்றலின் நுணுக்கங்கள் அழகாக வார்த்தைகளில் வெளிப்படும்.

அவர் ஓவியம் தீட்டும் போது ஏதோ ஒரு அசுரத்தன்மை அவரை ஆட் கொண்டது போல் தோன்றும்.அவருடைய உடல் அசைவுகள் வேடிக்கையாகவும் பைத்தியகாரத்தனமாகவும் தோன்றும். தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருப்பவர்கள் வேடிக்கையாக ரசித்துக் கொண்டு இருப்பார்கள்.தனக்குள் அவர் எதோ முனகிக் கொண்டிருப்பது அத்துடன் ஒத்துப்போவது போல் இருக்கும்.எல்லோரும் அறிந்த இந்தக் கிறுக்குத்தனங்கள் தான் அவரை முழுமையாக்கினவோ!.

கொளுத்துகாரன் கலவையை அள்ளி வீசுவது போல் வண்ணங்களை கான்வாஸின் மேல் வீசுவார். வண்ணத்துளிகள் தவறில்லாமல் சரியான இடங்களில் தெளிக்கும். முக்கியமாக மனிதர்களின் உருவங்களை (Portrait) வரையும் போது இது நடக்கும்.பெரிய தேய்ந்து போன ப்ரஷ்ஷை தூக்கிப் பிடித்துக் கொண்டு நன்றாக பின்னால் வளைந்து, வலது பாதத்தை தூக்கி இடது கை சரியான இடத்தை நோக்கி நீண்டிருக்க ,ஒரு கை தேர்ந்த விளையாட்டு வீரன் வேலை எறிவது போல் சரியான இடத்தில் வண்ணக் கலவையை வீசுவார். வண்ணங்களில் தோய்ந்த கிழிந்த துணிச்சுருள் பந்து போல் கையில் இருக்கும். அதை கொண்டுதான் விதவிதமான texture களை அவர் ஓவியத்தில் உருவாக்குவார். அந்த துணிப்பந்தை வைத்துக் கொண்டு ஓவியத்தை ஒரு வெறியுடன் சுற்றிச் சுற்றி வருவார். ஓவியத்தில் ஈடுபட்டு இருக்கையில் தன் உடைகளை பற்றியோ கைகளைப்பற்றியோ சிறிதும் கவலை கிடையாது.தனக்கு தானே பேசிக்கொண்டும் பாடி கொண்டும் இருப்பார்.தன்னை சுற்றி இருப்பவர்களை பற்றியோ பார்த்து கொண்டிருக்கும் மாணவர்களை பற்றியோ நினைவு சற்றும் இருக்காது.

ஓவியம் தீட்டி கொண்டிருக்கும் போது சந்தான ராஜ் ஒரு அரை மயக்க நிலையில் இருப்பது போல் தோன்றும். அவர் நினைத்த போது அந்த நிலையில் போக முடியுமோ என்னவோ.! டாடாயிஸ்டுகள் இது போன்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டு ஓவியம் தீட்டுவது உண்டு.பிரபல மனோ தத்துவ நிபுணர் ஸிக் முண்ட் பிராய்டு கூறியது போல் அவர்கள் இம்முறையை தானியங்கி ஓவியம் (Automatic painting) என்று கூறுவர்.20 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய சமூக அரசியல் கலவரத்தை எதிர்த்து நிகழ்ந்தாகும் இது.இதற்கு முன் நிகழ்ந்த தொழிற்புரட்சி மற்றும் அடிக்கடி நடைபெற்ற போர்கள் இரு உலக மகா யுத்தங்களில் முடிந்தது.இவை ஐரோப்பிய சமூகவியலில் ஒரு பயங்கர பாதிப்பை உண்டாக்கின.இப்பாதிப்பு எல்லா வித அறிவார்ந்த விஷயங்களிலும் இருந்தது.கலையும் அதற்கு விதிவிலக்கல்ல.டாடாயிஸம், அதிலிருந்து பிறந்த எக்ஸ்பிரஷனிஸம்,ஸர்ரியலிசம் போன்றவைகளும் அப்போது வழக்கில் இருந்த ஓவிய/ சிற்ப முறைகளை எதிர்ப்பவையே.இந்த சமூக அரசியல் மற்றும் அறிவுப் புரட்சிகள் ஐரோப்பிய வரலாற்றைப் பாதித்தது போல் இந்தியக் கலை உலகைப் பாதிக்கவில்லை. இந்தியாவுக்கென்று தனியான சமூகவியல் வரலாறு உண்டு.

சந்தானராஜூம் புரட்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் ஐரோப்பாவின் ஆண்ட் ரோ ப்ரெடன் போன்றோ, பால்ஸெஸான் போன்றோ அல்ல. அவருடைய புரட்சி அபிவிருத்தி அடையாத தமிழ்நாட்டுக் கிராமப்புறத்திலுள்ள நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்ட மக்களின் வாழ்க்கையை மட்டுமே சார்ந்தது. மேலும் அதனின்று வந்த பாதிப்பு ஓர் உணர்வு பூர்வமான இளைஞனுக்கே உரியது.அவர் சமூகத்தைச் சேர்ந்த பலரையும் போல் ஒரு தனி மனிதனின் வளர்ச்சியின் மேல் ச்அமூகவியலுக்கு இருந்த பாதிப்பை பற்றி அவரும் அறிந்து இருக்கவில்லை.ஆயினும் அவர் சக்தி வாய்ந்த பிறவிக்கலைஞர் என்பதில் ஐயமில்லை.

நவீன ஓவியங்களில் உள்ள பல பரிமாணங்களையும் தன்னுள் அடக்கியிருந்தாலும் அவருடைய கிராமப்புற வாழ்க்கையின் அடிப்படைகளே அவருடைய படைப்புகளில் அதிகம். இந்த குணங்கள் அவருடைய ஓவியங்களுக்கு ஒரு இந்திய தன்மையை ,சொல்லபோனால் தென்னிந்திய தன்மையைக் கொடுக்கின்றன.அடிப்படையான கோடுகளும் பலவிதமான texture களும் ஸிம்பனி இசையைப் போன்று பிணைந்துள்ளன. சந்தான ராஜின் மேதமை கிராம சூழலின் அழகை தனக்கே உரிய நேர்த்தியிலும் style மூலமாகவும் காப்பாற்றுவதில் தெளிவாகிறது.

ஓவிய மேதை சந்தான்ராஜிற்கு தத்துவார்த்தமான ஒரு பக்கமும் உண்டு.ஒரு ஆன்மீகக் குருவைபோல் படைப்பாற்றலின் தத்துவார்த்த விஷயங்களை அசரீரி கூறுவது போல் ஒவ்வொரு ஓவியத்தை முடித்தபின் பேசுவார்.அவர் ஓவியத்தில் ஈடுபட்டு இருக்கும் போது சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவருக்குமே அவருடைய தத்துவார்த்தமான பேச்சின் ஆழத்தைக் கிரகித்து கொள்ள முடிந்ததா என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம். ஆதிமூலம், தாமோதரன் செல்லப்பா, அல்போன்ஸோ,பாஸ்கரன் மற்றும் பல பிரபலமான தென்னிந்தியக் கலைஞர்கள்- என்னையும் சேர்த்துதான் இந்த தலை சிறந்த ஓவியரின் தொடர்பால் நல்ல பலன் அடைந்தனர்.

கண் நிறைந்த நீருடனும் மனம் நிறைந்த மரியாதையுடனும் என் மதிப்புக்குரிய குரு சந்தான ராஜை நினைவு கூறுகிறேன்.

ஆங்கில மூலம்:கோயா NKP முத்து

தமிழாக்கம் : லட்சுமி வெங்கட்ராமன்

புகைப்படங்கள் : ஓவியர் ட்ராட்ஸ்கி மருது

article courtesy : interdisciplinary society for art & aesthetics -ISAA
News letter,june 2009, New Delhi.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...