அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அரசியல்தான் நம்மை வீழ்த்தியது:தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்:சீமான்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   21 , 2009  07:57:44 IST

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த இயக்குநர் சீமான் ஞாயிறன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் இயக்குநர் சீமான் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசியதிலிருந்து,'எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கு என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்.
எங்களுக்கும் தன்மானம் இருக்கு என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள். ஆனால் தமிழன் பிரதமராக முடியவில்லையே.
ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் காங்கிரச்சார், இந்திராகாந்தியை கொன்ற சீக்கிய வம்சத்தை சேர்ந்தவரை மட்டும் ஏன் பிரதமராக்கியிருக்கிறார்கள்.
சீக்கியர்கள் மேல் உள்ள பயம் காரணமாகத்தான் அப்படி செய்திருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க முடியாமல்தான் அப்படி செய்கிறார்கள்.ஆனால் தமிழன் இழிச்சவாயன் என்று தெரியும். அதனால் அவனை விரட்டியடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ காங்கிரஸ் பிரமுகர்கள் இருக்கிறார்கள். அவர்களை பிரதமாரக்க வேண்டியதுதானே.ப.சிதம்பரத்தை பிரதமராக்க வேண்டியதுதானே. இதையெல்லாம் தமிழக காங்கிரஸார் உணரவேண்டும்.

பொதுவாக தமிழனை பிரதமராக்க டெல்லி காங்கிரஸ் தயங்கும். ஏன் தெரியுமா?பணத்துக்காக தன் இனத்தையே காட்டிக்கொடுத்து விடுவான் தமிழன் என்று அவர்களுக்கு தெரியும்.

இந்தியாவில் இறையாண்மை இருக்கிறது என்கிறார்கள். எங்கே இருக்கிறது சொல்லுங்கள். அரசு விழாக்களில் பிரதமர்,ஜனாதிபதி படங்கள் இருக்கலாம்.
அமைச்சர்கள் படம் இருக்கலாம்.ஆனால் எந்த விதத்தில் அரசு விழாக்களில் சோனியாவின் படம் இருக்கிறது.இதை ஏன் காங்கிரஸ்காரர்கள் தட்டிக்கேட்க வில்லை.அவர்கள் தட்டிக்கேட்கவும் முடியாது.இறையாண்மை இங்கே கேள்விக்குறிதான். காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவரகள் கூட இதை ஏன் எதிர்த்து கேட்கக்கூடாது.

இளையான்குடியில் ஒரு முஸ்லீமை வைத்து என் மீது வழக்கு போட வைத்து என் தகுதியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறேன் என்கிறார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கிறது;வசப்படுகிறேன். பலருக்கு உணர்ச்சி இல்லை;வசப்படவில்லை.
நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.
ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்.

அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12500 பேரை சீரழித்துக்கொன்றார்கள். அதற்கு இந்திய ராணுவம் என்ன செய்தது. அதை திட்டமிட்டு மறைத்தது.உலகம் தடுக்கலாம்;ஆனாலும் நாம் வென்றெடுப்போம் தனி ஈழத்தை. அதை வென்றெடுக்க சாகத்துணிந்தவனாக இருக்க வேண்டும். இதை சொன்னது அண்ணன் பிரபாகரன்.

உலகில் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. அரசியல்தான் நம்மை வீழ்த்தியது அந்த அரசியலை வீழ்த்தும் வரை நாம் ஓயக்கூடாது.

என் செய்ய வேண்டும் என் ரத்தங்களே....இனி இதுவரை செய்யத்தவறிய அரசியலை செய்ய வேண்டும். ஏமாந்த என் இனமே..அடிவாங்கும் என் இனமே வாருங்கள் ஒன்று திரள்வோம்.

எதிரிகளை எரிக்கும் நெருப்பாக வெகுண்டு எழுவோம். தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்'என்று பேசினார்.


முன்னதாக இயக்குநர் சீமான் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது இயக்குநர் சீமான் செய்தியாளர்களிடம்,'தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.

இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது.

இனி நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ரத்தம், கண்ணீர்,மண்ணையும் இழந்துவிட்டோம். அதனால் எங்களால் இழப்பதற்கு ஒன்றுமில்லை.


ஆனால் இனி இழக்கப்போவது சிங்களன் தான். சிங்களன் தான் இழக்க வேண்டும்

பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு;அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும்.கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்போவதாக கலைஞர் அறிவித்திருக்கிறார்.மகிழ்ச்சிதான்.ஆனால் இந்த மாநாடு ஏன் காலம் கடந்து நடக்கிறது.

ஒன்று மட்டும் புரிகிறது. ஈழ போராட்டங்களை திசை திருப்பத்தான்,மக்களின் போராட்ட குணங்களை மாற்றத்தான் உலகத்தமிழ் மாநாடு நடக்கிறது.ஆனால் என்ன செய்தாலும் எங்கள் போராட்ட குணத்தை மாற்ற முடியாது'என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...