அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி :முதல்வர் கருணாநிதி

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   21 , 2009  07:33:04 IST

ஈழத்தமிழர் பிரச்சினையில் பழ.நெடுமாறன் தவறான தகவல்களை பரப்புகிறார் என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்.

இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் 'இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தான் காரணம்' என்று கூறியுள்ளார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் :

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது பற்றி?

பதில்: அந்த செய்தித் தொகுப்பு முழுவதையும் படித்துப் பார்த்தேன். அதில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் நெடுமாறன் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தச் செய்தித் தொகுப்பிலிருந்து நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள, அந்தக் கோஷ்டியினர் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யும் - தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாகக் கருத வேண்டியிருக்கின்றது. பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல அவரைப் பிடித்து 'குண்டர்கள்' சட்டத்திலோ, 'பொடா' சட்டத்திலோ மாதக்கணக்கில் சிறையில் போட்டால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பார்கள். எது எப்படியிருப்பினும் 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.


கேள்வி: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவது பற்றி தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?

பதில்: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக இதுவரை எந்தவிதமான கடிதமோ, தகவலோ அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடமிருந்து வெளியிடப்படவில்லை. ஆனால் கேரளாவைச் சேர்ந்த சிலர், ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டதாக செய்தியைப் பரப்பி வருகிறார்கள். அந்தச் செய்தியை சில நாளேடுகள் பெரிதுபடுத்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முல்லைப் பெரியாறு அணை குறித்த பிரச்சினை உச்சநீதிமன்றத்திலே நிலுவையிலே உள்ளதை மத்திய அரசே நன்கறியும். எனவே கேரள அரசுக்கு மத்திய அரசு இதுபோன்றதொரு அனுமதியை கொடுத்திருக்காது என்றுதான் நாம் நம்புகிறோம். அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத பத்திரிகைச் செய்தியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, சில கட்சியினர் அதற்காகப் போராடப் போவதாக அறிவிப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.


கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் தாமதமாகிறதே?

பதில்: மத்திய கப்பல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, ஜி.கே.வாசன் பேசும்போது, உச்சநீதிமன்றத்தில் சேது திட்டம் பற்றிய தீர்ப்பு மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கத்தக்க வகையில் இருக்கும் என்று சொல்லியிருப்பது இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலே உள்ளது. மேலும் அவர் பேசும்போது, சேது சமுத்திரத் திட்டம், நாட்டின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்குமா என்பதை, பச்சோரி தலைமையில் உள்ள குழு ஆராய்ந்து, விரைவில் தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார். அவரும் நாடும் எதிர்ப்பதைப் போல சேது திட்டம் விரைவில் முடிவாகும் என்று நாமும் நம்புவோம்.

என்று கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...