அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தந்தை பெரியாரின் கருத்துக்களை சொன்னவர் கவிஞர் சர்வக்ஞர் - கருணாநிதி

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2009  08:49:06 IST

'தந்தை பெரியாரின் கருத்துக்களை, முன்பே எடுத்துச் சொன்னவர் கன்னட கவிஞர் சர்வக்ஞர். அவரது கருத்துக்களை நாங்கள் உள்ளத்தில் ஏந்தியுள்ளோம்.எந்த சதித்திட்டங்களுக்கும் இடம் தராமல் இரு மாநில மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலையை உருவாக்க பாடுபடுவோம்' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

இ‌ன்று சென்னை அயனாவரம் ஜீவா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை ‌‌திற‌ப்பு ‌விழா நடைபெ‌ற்றது.

அயனாவரத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் விழா நடைபெ‌ற்றது.விழா மேடையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் எடியூரப்பா திறந்து வைத்தார்.விழாவில் கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா, தமிழக அமைச்சர்கள்,நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், கன்னட சமுதாய, கலாச்சார சங்கமான சினேகா அமைப்பின் தலைவர் அட்டாவர் ராம்தாஸ், நடிகை வைஜயந்தி மாலா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு தலைமையேற்ற முதல்வர் கருணாநிதி விழாவில் பேசியபோது,'கடந்த 9ம் தேதி பெங்களூரின் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்நிகழ்ச்சிக்கு நான் வரும் போது, சாலையோரங்களில் திமுக கொடிகளும், பாரதிய ஜனதா கட்சிக் கொடிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருந்தன. திமுக, அணி மாறிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இரு கட்சிகளின் கொடிகளும் கலந்து காணப்பட்டன.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழி வளர்ச்சியிலும் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அந்த மொழிகளுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இங்கு செயல்படும் கன்னடப் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. கன்னட மக்களின் பண்டிகையான யுகாதி திருநாளை தமிழக அரசு, விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு மற்றும் கேரள மக்களின் ஓணம் பண்டிகை ஆகியவற்றின் போதும், அந்த மாநில மக்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் அதையே முதன்மை மொழியாக எடுத்து படிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. கன்னட மொழி பாடநூல்களை தமிழக அரசே அச்சிட்டு, தமிழக அரசு பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிட்டு வருகிறது.

பெங்களூரின் திருவள்ளுவர் சிலை, சென்னையில் சர்வக்ஞர் சிலை என இரண்டு சிலைகள் மட்டும் அமைக்கப்படவில்லை. இதன் மூலம் இரு மாநில ஒற்றுமை என்ற சிலையும் திறக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கன்னடக் கவிஞர் சர்வக்ஞர், அன்றே பெரியாரின் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர். புரட்சிக்கரமான கருத்து, புயல்வேக எழுத்து ஆகியவற்றை கவிதை மூலம் தந்து ஜாதி, மத பேதமற்ற முறையில் மக்கள் வாழ வேண்டும் என எடுத்துக் கூறியவர் அவர்.

கர்நாடகாவில் மட்டுமல்ல; தற்போது தமிழகத்திலும் அவர் அடியெடுத்து வைத்துள்ளார். என்றாலும், இதற்கு முன்னரே அவரை நாம் அறிவோம். கவிஞர் சர்வக்ஞரின் கருத்துக்களை நாம் நமது உள்ளத்தில் ஏந்தியுள்ளோம்.

இங்கே பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, என்னை அண்ணன் என்று அழைத்தார். எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் எனக்கு தம்பி இல்லாத குறையை இன்று முதல் போக்கிவிட்டார் எடியூரப்பா. அவரை நான் தம்பியாக ஏற்றுக்கொண்டுள்ளேன். இதனால், பிற தம்பிமார்கள் வருத்தப்பட மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

நாம் சகோதரர்களாக ஒன்றிணைந்து, இரு மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களது பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க வேண்டும். ஒரு பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பது பலருக்கு பிடிக்காது. என்றாலும், நாம் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க வேண்டும்.

இலங்கை பிரச்சனையும் சுமூகமாக தீர்ந்துவிடக் கூடாது என்று பலர் நினைத்தார்கள். தற்போது இலங்கை பிரச்சனை தீர்ந்துவிட்டாலும் கூட, பலர் அதை இன்றும் கிண்டி, கிளறிக்கொண்டிருக்கின்றனர்.

நம்மை இரு மாநில முதல்வர்களாக பார்ப்பவர்களுகும், அண்ணன் - தம்பியாக பார்ப்பவர்களுக்கும் தேவையானவற்றை நாம் நிறைவேற்றிக் கொடுப்போம். எந்த சதித்திட்டங்களுக்கும் இடம் தராமல் இரு மாநில மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலையை உருவாக்க பாடுபடுவோம்'என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...